முனைவர்அஷ்ஷெய்க் அப்துர் ரஹீம் அவர்கள் 19.10.23 அன்று மறைவு!
1933 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வாணியம்பாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.
1957 ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில மொழியில் B. A, B. Lit
முடித்தார். அதன் பிறகு கெய்ரோவில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் 1964 ல் அரபி மொழியில் M. Phil, Ph. D முடித்தார். அரபி மொழியை தாய் மொழி அல்லாத மக்கள் எளிமையாக கற்றுக் கொள்ள ஒரு புதிய பாடத்தை தயாரித்து
Durus Al lugathil Arabiya li ghairil Nathikina Biha
என்ற நூல்களை மூன்று பாகங்களாக எழுதினார்.
1969ல் அல் மதீனா பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பேராசிரியராக சேர்ந்தார். அஷ்ஷெய்க் அவர்களின் நூல்கள் மதீனா பல்கலைக்கழகத்திலும் பல்வேறு நாடுகளிலும் பயிற்றுவிக்கப் படுகிறது!
அரசர் ஃபஹத் அல்குர்ஆன் அச்சகத்தில் மொழி பெயர்ப்புத்துறை இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.
அஷ்ஷெய்க் அவர்களின் பல நூல்களை சென்னை பெரம்பூரில் இயங்கும் IFT என்ற இஸ்லாமிய நிறுவனம் வெளியிட்டு வருகிறது!
அன்னாரின் இழப்பு இஸ்லாமிய சமூகத்திற்கு பேரிழப்பு! பெரும் கருணையாளன் அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் சேர்ப்பானாக! ஆமீன்!