Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

இந்தியா அபார வெற்றி!
அபூசுமைய்யா Oct 23 2023 விளையாட்டு

இந்தியா அபார வெற்றி!

இந்தியா அபார வெற்றி!

 முஹம்மது  ஷமியின் வேகத்தில் வீழ்ந்தது நியூஸ்லாந்து!

இந்தாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் தோல்வியே காணாத ஜாம்பவானாக வலம் வந்த நியூஸ்லாந்து அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா!

5 விக்கெட்களை வீழ்த்திய முஹம்மது ஷமி! 

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன் முதலாக களம் இறங்கிய முஹம்மது ஷமி,  முதலில் பேட்டிங் செய்த நியூஸ்லாந்து அணியை தனது தனித்துவமான பௌலிங்கால் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி  ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். ஒரு பக்கம் மிட்செல் 126 பந்தில் 130 ரன்கள் குவித்தார், இருந்த போதிலும்  273 க்கு 50. ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது நியூசிலாந்து! 

கோலியின் அதிரடி தொடர்ந்தது  95 ரன் குவிப்பு!

கடந்த மேட்சில் பங்களாதேஷ்க்கு எதிராக சதம் விளாசிய விராட், இந்த மேட்ச்சிலும் சதம் அடிப்பார் என்று ஆலுடன் காத்திருந்த

ரசிகர்கள்,  95 ரன்னில் எதிர்பாரா நிலையில்  மேட் ஹென்றி வீசிய பந்தில்  கிளென் ஃபிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்!

வழக்கம் போல சிறப்பாக மேட்சை முடித்த ஜடேஜா!

48 வது ஓவரில் கடைசி பந்தில் ஃபோரை விளாசி வழக்கம் போல மேட்சை முடித்தார்!

48 ஓவரில் 6 விக்கெட்  இழப்பிற்கு 274 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது இந்தியா!

ரன்கள் விவரம்

இந்தியா


நியூஸ்லேந்து


Related News