தேசத்திற்காக போராடியவர்களிடம் தேசம் கிடைத்தால், அந்த தேசம் எப்படி முன்னேறும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் ஆப்கானிஸ்தான்!
ஆப்கானிஸ்தான் தற்போது முழுமையாக அமைதி தேசமாக மாறி வருகிறது. இந்த நாட்டை ஆளும் தாலிபான் அரசு கொள்கை மற்றும் சர்வதேச நாடுகளுடன் மிகுந்த இணக்கமான போக்கை அவர்கள் முன்னெடுத்துச் செல்வது அந்த நாட்டின் வருங்கால வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
285 கிலோ மீட்டர் அளவுக்கு செயற்கையான கால்வாய்!
தற்போது ஆப்கானிஸ்தான் அரசு தண்ணீர் தேவையை நிறைவேற்ற எந்தவொரு நாட்டிலும் உதவி பெறாமல் தானாகவே 285 கிலோ மீட்டர் அளவுக்கு செயற்கையான கால்வாயை பாலைவனங்கள் வழியாக வெற்றிகரமாக அமைத்து வருகிறது.
பாலைவனத்தில் ஐந்தரை இலட்சம் ஏக்கர் பரப்பளவில் ஆன நிலங்கள் பயன் பெறும்!
இந்த செயற்கை ஆறுகள் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள பாலைவனத்தில் ஐந்தரை இலட்சம் ஏக்கர் பரப்பளவில் ஆன நிலங்கள் பயன் பெறும் என்று தெரிகிறது. இதன் மூலம் பாலைவனத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கோதுமையை பயிர் செய்து சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யும் ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு திட்டம் தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது.மேலும் பல இலட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காய்கறிகள் பயிரிடுதலுக்கு தேவையான தண்ணீர் இதிலிருந்து பெறப்படும்.
2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளில் உள்ள பொறியியல் நிபுணர்கள் ஆப்கானிஸ்தான் சுயமாகவே இது போன்ற திட்டத்தை மிகவும் வேகமாக நடைமுறைப்படுததுவதை கண்டு வியப்படைந்துள்ளார்கள் . இந்த திட்டம் முழுமையாக உள்ளூர் இன்ஜினியரிங் வடிவமைப்பு மூலம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் தான் ஆப்கானிஸ்தான் மக்கள்!
இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் நபர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உருவாகி வருகிறது. ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போது அமைதியாக வாழும் சூழல் நிலவுகிறது . எப்போதும் இந்தியர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் தான் ஆப்கானிஸ்தான் மக்கள் . ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் தற்போதைய சூழலில் வெகு வேகமாக முன்னேறி வருவதாக சர்வதேச சமூகம் கணித்துள்ளது.
தேசத்தை காட்டிக் கொடுத்த கொள்ளை யடிக்கும் போலி தேச பக்தர்களிடம் நாடு கிடைத்தால் எப்படி நாடு வீழ்ச்சி அடையும் என்பதற்கு இன்று பல நாடுகள் நமக்கு நினைவுக்கு வரும்!