Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

தூய்மை இறைநம்பிக்கையில் பாதி - நபி மொழி
அபூசுமைய்யா Oct 26 2023 உடல் நலம்

தூய்மை இறைநம்பிக்கையில் பாதி - நபி மொழி

அக்டோபர்  15 கைகள் கழுவும் தினமாக 2008 லிருந்து உலகமே கடைபிடிக்கிறது!


நாக்கு மூக்கு தொண்டை சுத்தம் அவசியத்தை கொரோனா பெருந்தொற்று காலங்களில்  அறிவுறுத்தப்பட்டது!


இறைவனே  இறைத்தூதர்கள் மூலமாக தூய்மையை எவ்வாறு  பேண வேண்டும் என்ற அவசியத்தையும் வழி முறைகளையும் கற்றுத்தந்துள்ளான்.


இறைவன் கூறுகின்றான்:


நம்பிக்கை கொண்டவர்களே! 

தொழுகைக்கு நீங்கள் ஆயத்தமானால், உங்கள் முகங்களையும் உங்கள் இரு கைகளையும் முழங்கைகள் வரைக் கழுவிக் கொள்ளுங்கள், உங்களுடைய தலைகளை (ஈரக் கைகளால்) தடவிக்கொள்ளுங்கள்; உங்களுடைய கால்களையும் இரு கணுக்கால் உட்பட(க் கழுவிக் கொள்ளுங்கள்) - அல்குர்ஆன் 5:6


அல்லாஹ் தூய்மையானவர்களை (யே) நேசிக்கிறான். - அல்குர்ஆன் 9:108


தூய்மையின் நன்மைகளை போதிக்கும் நபி மொழிகள் சில :

    உளூ எனும் அங்கத்தூய்மை செய்யும் முறை:

முஃமினான அடியான் உளூச் செய்யும் சமயம் வாய் கொப்பளித்ததும் அவனுடைய வாயின் அனைத்துப் பாவங்களும் கழுவப்படுகிறது. மூக்கை (நாசித்துவாரத்தை)ச் சுத்தம் செய்ததும் மூக்கின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகிறது, முகத்தைக் கழுவியதும் முகத்தின் பாவங்கள் கழுவப்பட்டு கண் இமை முடிகளின் வேரிலிருந்து வெளியேறிவிடுகிறது. கைகளைக் கழுவியதும் கைகளின் பாவங்கள் கழுவப்பட்டு நகங்களின் கீழிருந்து வெளியேறிவிடுகிறது. தலைக்கு மஸஹ் செய்ததும் தலையின் பாவங்கள் கழுவப்பட்டுக் காதுகளிலிருந்து வெளியேறிவிடுகிறது. கால்களைக் கழுவியதும் கால்களின் பாவங்கள் கழுவப்பட்டுக் கால் விரல் நகங்களின் கீழிலிருந்து வெளியேறிவிடுகிறது. பிறகு, அவர் பள்ளிக்குச் செல்வதும் தொழுவதும் அவருக்கு அதிகப்படியான(சிறப்பிற்குக் காரணமான)தாக இருக்கும்' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதை ஹஜ்ரத் அப்துல்லாஹ் ஸுனாபிஹீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உளூச் செய்துவிட்டுத் தொழ நின்று அல்லாஹ்வின் தகுதிக்கேற்றவாறு அவனைப் புகழ்ந்து மேன்மைப்படுத்தியும் உயர்தன்மையைக் கூறியும் தனது உள்ளத்தை (அனைத்துச் சிந்தனைகளிலிருந்தும்) வெறுமையாக்கி அல்லாஹ்வின் பால் சிந்தனை செலுத்தித் தொழுதால், அவர் தொழுது முடித்ததும் அன்று பிறந்த பாலகனை போன்று பாவங்களிலிருந்து தூய்மையடைந்துவிடுகிறார்'' என்று ஹஜ்ரத் அம்ரிப்னு அபஸா ஸுலமி (ரலி) அவர்களின் வாயிலாக மற்றொர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

நூல்: நசயீ, முஸ்லீம் 


பல் துலக்குதல்:

எனது உம்மத்துக்கு சிரமம் ஏற்படும் என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லையென்றால், ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் பல் துலக்க (மிஸ்வாக் செய்ய) அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். -  நூல் : முஸ்லீம் 


இறைவனே இறைத்தூதர்கள் மூலமாக கற்றுத்தந்த இயற்கை வழிமுறைகள்:


நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது

வெட்கம், நறுமணம் பூசுவது, (மிஸ்வாக்) பல் துலக்குவது, திருமணம் செய்வது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நூல் : திர்மிதீ


பத்து காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது

       மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது), மூக்கில் தண்ணீர் செலுத்திச் சுத்தம் செய்வது, நகம் வெட்டுவது, விரல்களின் இணைப்புகளையும் (அதேபோல் உடலில் அழுக்குப் படியும் இடங்களையும்) உதாரணமாக காது, மூக்குத் துவாரங்கள் போன்றவை களைப் பேணுதலாகக் கழுவது, தோள் புஜத்துக்குக் கீழ் ( அக்குள்) உள்ள முடியைப் பிடுங்குவது, தொப்புளுக்குக் கீழுள்ள(பிறப்புறுப்புகளில்) முடியைச் சிரைப்பது, மல, ஜலம் கழித்தபின் தண்ணீரால் சுத்தம் செய்வது ஆகியனவாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இவற்றில் பத்தாவது காரியம் என்னவென்பதை நான் மறந்துவிட்டேன் பத்தாவது காரியம் வாய் கொப்பளிப்பதாக இருக்கும் என எண்ணுகிறேன்' என்று ஹதீஸின் அறிவிப்பாளர் ஹஜ்ரத் முஸ்அப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நூல்: முஸ்லீம்


குளிப்பு

குளிப்பு கடமையான நேரங்கள் :

வெள்ளிக்கிழமை, பெரு நாள்கள், விந்து வெளிப்படல், உடலுறவு,  மாதவிடாய், பிரசவ உதிரப்போக்கு போன்ற நேரங்கள்.

குளிக்கும் முறை:

கடமையான குளிப்பை நிறைவேற்ற முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின், மர்மஸ்தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும். அதன் பின் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப்படுத்தி)க் கொள்ள வேண்டும். குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆண், பெண் இவ்வாறு கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் குளிப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போன்று வுழூ செய்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)


கத்னா எனும் சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

இஸ்லாமியர்கள் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சுன்னத் செய்யும் முறையை பின்பற்றி வருகின்றனர். ஆணுறுப்பின் முன்தோலை நீக்கும் இந்த முறை உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடியது என உலக ஆய்வாளர்கள் பலரும் கூறுகின்றனர். சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாம்!


  •      சுன்னத் செய்த ஆணுறுப்பை எளிதாக சுத்தம் செய்ய முடியும். சிறுநீர் கழிப்பதால் ஆணுறுப்பில் சேரும் அழுக்குகள் சுன்னத் செய்திருப்பதால் சேருவதில்லை.
  •       சிறுநீர்ப்பாதையில் ஏற்படு்ம் தொற்று நோய்கள் சுன்னத் செய்திருப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை. சுன்னத் தெய்திருப்பவர்களை விட செய்யாதவர்களுக்கு அதிக தொற்று ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
  •     சிறுவர்களுக்கு முன் தோல் குறுக்கம் எனப்படும் பகுதி மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதால் சிறுநீர் அங்கேயே தங்கி நோயினை உண்டாக்கும். சுன்னத் செய்த சிறுவர்களுக்கு இவ்வாறு ஏற்படுவதில்லை.
  •      சுன்னத் செய்த ஆண்களுக்கு எய்ட்ஸ், பால்வினை நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று அமெரிக்க நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
  • புற்றுநோயில் ஆண்குறி புற்றுநோயும் ஒன்று. சுன்னத் செய்தவர்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்படுவதில்லை. மேலும் சுன்னத் செய்தவரின் துணைக்கும் கர்பப்பை வாய் புற்று நோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
  •      குறிமெழுகு என்பது ஆண்குறியின் முன் பகுதியில் சேரும் மெழுகு போன்ற ஒன்று. சுன்னத் செய்வதால் இவை ஆண்குறியில் அதிகம் சேருவதில்லை. மேலும் சுன்னத் செய்தவர்கள் இதை சுத்தம் செய்வது எளிது.
  •    ஆணின் இனப்பெருக்க உள் உறுப்பில் ஏற்படுவது புரோஸ்டெட் புற்றுநோய். சுன்னத் செய்தவர்களுக்கு இந்த புரோஸ்டெட் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் குறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பல அறியாத நன்மைகளும் உண்டு!

மேற்கண்ட வுளூ என்ற அங்கத்தூய்மை, பல் துலக்குதல், குளித்தல், கத்னா எனும்  சுன்னத் செய்தல் போன்ற செயல்களை பேணுவதன் மூலமாக தூய்மையை பேணி உடல் நலம் பேணலாம்!

நலமுடன் வாழலாம்! 

Related News