Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அத்திக்கடை நசூர்தீன் Oct 30 2023 செய்திகள்

அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவத்துக்கும் பாலஸ்தீன போரளிகளுக்கும் போர் நடைபெற்றுவருகிறது. இருதரப்புகளுக்கும் பலத்த பொருளாதார சேதங்களும்,உயிர் இழப்புகளும் அதிகமாக ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலை நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக பல உலக நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில். பாலஸ்தீன மக்களை ஆதரித்தும், ஆக்ரமிப்பு இஸ்ரேலுக்கு ஆதரவளித்த மோடி மத்திய அரசை கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக அத்திக்கடையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் கிளைமாவட்ட  பொருளாளர் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில், பொறுப்பாளர் மஸ்தான் முன்னிலை வகித்தார். மஜக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.


இதில் மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி மற்றும் பொதக்குடி, புலிவலம் கிளை நிர்வாகிகள்.  அத்திக்கடை கிளை முன்னால்  செயலாளர் சாகிதுபைசல் கிளை செயற்குழு உறுப்பினர் குத்புதீன் மாவட்ட அணி நிர்வாகிகள், மற்றும் அத்திக்கடை ஜமாத் துணைதலைவர் ஹலிக்குல் ஜமான், செயலாளர் சுல்தான் ஊராட்சிமன்ற தலைவர் பாவாபகுரூதீன் அவர்களும், பொதுமக்களும் மிகுதியாக கலந்து கொண்டனர். மஜக அத்திக்கடை கிளை கு.ரிழ்வான் முஹம்மது இறுதியாக உரைநிகழ்த்தி நன்றி தெரிவித்துக் கொண்டார். 

Related News