தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் யு டியூபர் டிடிஎஃப் வாசன், சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் சாலை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், டிடிஎஃப் வாசனுக்கு கடந்த 1ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, இன்று புழல் சிறையில் இருந்து டிடிஎஃப் வாசன் வெளிவந்த நிலையில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர்அளித்த பேட்டியாவது-
நிருபர்:
தற்போது லைசென்ஸ் உங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி 10 வருடத்திற்கு இரு சக்கர வாகனம் உங்களால் ஓட்ட முடியாது.இது குறித்து என்ன உணர்கிறீர்கள்.
டி.டி.எஃப் வாசன் :
என் வாழ்க்கை முழுவதுமே என்னுடைய இரு சக்கர வாகனம் ஓட்டுகின்ற ஆர்வத்திற்காகவே அர்ப்பணித்துள்ளேன். எனக்கு 10 வருட லைசென்ஸ் ரத்து என்பது நியாயமே இல்லை.
இது திருத்துவது மாதிரி தெரியல, ஏதோ என் வாழ்க்கைய அழிக்கிற மாதிரி தெரியுது.
மேலும் எனக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் தப்பாக இருப்பதாகவும், நான் விபத்து நடந்து சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும், ஆனால் கொடுத்த புகாரில் புதுசு, புதுசாக ஏதோ தவறாக எழுதிக்கொடுத்துள்ளதாகவும், கூறியுள்ளார்.
இதனை அடுத்து தான் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், இன்டர்நேஷனல் லைசென்ஸ் எடுக்கலாம் என இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தன் கை உடைந்ததை விட உரிமம் ரத்து செய்தது அதிக வலியை தருவதாக கூறியுள்ளார்.