நேபாளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அன்று இரவு 11.47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவாகியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நேபாளத்தின் ஜாஜர்கோட் பகுதியில் ஏற்பட்ட இந்த அதிர்வானது, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களிலுள்ள பல இடங்களில் உணரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால், கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருக்கும் மேற்குப் பகுதியில் அதிகபட்ச சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் குபேர் கடயாத் கூறுகையில், அதிகபட்சமாக ஜாஜர்கோட்டில் 92 பேரும், ருக்கும் மேற்கு பகுதியில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர் எனக்கூறினார்.இது தவிர, 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுர்கெட் பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்காக எட்டு படைப்பிரிவுகளும், ஒரு ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேற்க்கொண்டு பாதிப்புக்குள்ளான பகுதியில் உள்ளூர் பாதுகாப்புப் படையினர்களும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.