புதுடில்லி
இந்தியாவின் கட்டிடக்கலையில் சிறந்து விளங்குவதுடன் உலக அதிசய சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலை கட்டியது யார்? என்ற சந்தேகம் இந்து சேனா அமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.அந்த அமைப்பின் தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் தாக்கல் செய்த மனுவில் தாஜ்மஹால் ஷாஜஹானால் புதுபிக்கபட்டதாகவும் இவை ராஜா மான்சிங்கின் அரண்மனை என வழக்கை தொடுத்துள்ளார். இவற்றை ஆய்வு செய்ய, டில்லி உயர்நீதிமன்றம் மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.
தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை கண்டறிவதற்கான வழிகாட்டுதல் வழங்க தொல்லியல்துறை,இந்திய தேசிய ஆவணக்காப்பகம் மற்றும் உ.பி.அரசுக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
முகலாயர்களின் அடையாளங்கள் இந்தியாவின் வரலாற்று அடையாளங்களாக திகழ்கிறது.பாபர் மசூதி முதல் பல வரலாற்று சின்னங்கள் என இவைகளை அழிப்பதே இந்த அமைப்புகளின் செயல்களாக உள்ளன.
இந்த வழக்கை டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் நீதிபதி துஷார் ரான் கெடலோ ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், தாஜ்மஹால் தொடர்பாக ஆய்வு நடத்தும்படி உத்தரவிட்டனர்.இது தொடர்பாகவும் மத்திய தொல்லியல் துறையிடம் கோரிக்கை மனுவாக அளிக்கும்படி பரிந்துரை செய்திருந்தது.
இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் தொடர்ந்து ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்து வருவது குறிப்பிடதக்கது.