பொதக்குடி நவம்பர் 05
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் தாருல் உலூம் மர்யமிய்யா நிஸ்வான் மதரஸாவில் முதலாம் ஆண்டுக்கான இரு நாள் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது.
இதில் மனிதனின் இரு உலக வாழ்வியலின் முக்கிய நிகழ்வுகளை காட்சியமைப்பாக வடிவமைத்திருந்தார்கள்.கண்காட்சி பயனுள்ளதாகவும்,இறையச்சம் வலுபெற ஆர்வமூட்டுவதாகவும் மதரஸாவின் ஆசிரியர்கள் இந்த கண்காட்சியை அமைத்துயிருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
KAS.நஸ்ரின் பர்வீன் முபல்லிகா முதல்வர் தாருல் உலூம் மர்யமிய்யா நிஸ்வான் மதரஸா அவர்கள் தலைமையில்.மௌலானா P.H.ஸலாஹுத்தீன் பாஜில் பாகவி அவர்களின் இறை பிராத்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
அல்ஹாஜ் N.M.நூர்கனி,A.W.கஸ்ஸாலி,அவர்கள்.(ஒருங்கிணைப்பாளர்கள்-SJNS) மேலப்பள்ளி முத்தவல்லி.அல்ஹாஜ் A.லியாக்கத் அலி BA.,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அல்ஹாஜ் K.A.சுல்தான் இபுறாஹீம் BA.,அவர்கள் வரவேற்புரையும்,
G.நூருல் எஹ்சான் பீவி ஆசிரியை-D.U.M.N மதரஸா அவர்கள் கண்காட்சியின் PROJECT WORK செயல் வடிவம் போதித்தலும்,மதரஸா மாணவ,மாணவிகள் பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
A.M.தாஜுத்தீன் (செயலாளர்-SJNS) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள்.
பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.S.யாஸ்மீன் அவர்கள் வருகை தந்த அனைவருக்கும் இறுதியாக நன்றி தெரிவித்து கொண்டர்கள்.