நாகை நவம்பர் 14.
நேற்று முதல் டெல்டா மாவட்டங்களான நாகையில் பரவலான கனமழை காரணமாக வயல்களில் அதிகமான மழைநீர் சூழ்ந்து காணப்படுகின்றன.
இதை தொடர்ந்து நாகை ECR சாலை செல்லூர் பஞ்சாயத்து பகுதிகளில் மழைநீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மஜக பொதுசெயலாளரும், முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சென்று பாதிக்கபட்ட விபரம் குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது.
80 மில்லி மீட்டர் மழை பெய்தாலே இப்பகுதியில் உள்ள வயல்கள் நீர் சூழ்ந்து பாதிக்கப்படும் என்றும்.தேங்கிவுள்ள மழை நீரை வெளியேற்ற வேளாண்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திடவும்.விவசாயிகளின் பாதிப்பை தமிழ்தாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதுடன்.சம்பா சாகுபடிக்கான இன்சூரன்ஸ் செலுத்திட இன்றைய தேதி கடைசியாகும்.
எனவே தீபாவளி மற்றும் மழையின் காரணமாக விவசாயிகள் பணம் செலுத்த தாமதம் ஏற்பட்டுள்ளது.பணம் செலுத்திட கூடுதல் அவகாசம் அரசு தந்திட வேண்டும் என்பதாக அவர் கூறினார்.
இதில் காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. தனபாலன், மஜக மாவட்ட துணைசெயலாளர் சேக்அகமதுல்லாஹ் ஆகியோர் உடனியிருந்தனர்.