காட்டுப் பன்றிகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டி மாங்குடி விவசாயிகள் கோரிக்கை
"காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு பாதுக்காகபட வேண்டும் மாங்குடி விவசாயிகள் கோரிக்கை
23, நவம்பர் ,2023
மாங்குடி மைனர்
தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு மாங்குடி, வட்டாரங்களில் கிராம பகுதிகளில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் கோரிக்கை .
வடக்கு மாங்குடி கிராமங்களில் காட்டுபன்றிகளால் ஏற்படும் விவசாய பாதிப்பு பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக நீடித்து வருகிறது.
”தொடர்ந்து நாங்கள் காட்டுப் பன்றிகளால் பெருத்த சேதத்தை சந்தித்து வருகிறோம். மாலை ஆறு மணி ஆனால் வயல்வெளிகளில் பன்றிகள் படையெடுத்து நிற்கின்றன. விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகிறோம். நாங்கள் எங்கள் பயிர்களை காப்பாற்ற காட்டு பன்றிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்றனர், இப்பகுதி விவசாயிகள்.
படையெடுத்து வரும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த இரும்புக்
கூண்டுகளை வைத்து பன்றிகளை பிடித்து நிரந்தர தீர்வு காணபடவேண்டும் ஏற்கெனவே, விவசாயம் நலிவடைந்து வரும் சூழலில் அதனையும் சமாளித்து விவசாயம் செய்ய முற்பட்டால் காட்டுபன்றிகளால் சேதம். பயிர்செய்ய செலவிட்ட பணத்தைக்கூட திரும்ப எடுக்க முடியாமல் நட்டத்தை சந்திக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகின்றனர்.விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் படையெடுத்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.