தெலுங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்.அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு இருந்து வரும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்த 4 சதவீதத்தை SC,ST,BC மக்களுக்கு பிரித்துக் கொடுப்போம் என்றும். ST இடஒதுக்கீட்டில் இருந்து மடிகா சமூகத்துக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முஸ்லீம் மக்களின் நலன்களை ஒன்றிய பாஜக அரசு ஒரு பொருட்டாகவே எடுத்ததும் இல்லை.இனி எந்த காலத்திலும் எடுக்க போவதும் இல்லை! ஒரு அரசு அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பொதுவானதாக பாகுபாடு காட்டாமல் இருக்கபடவேண்டும்.ஆனால் இதற்க்கு என்றுமே பாஜக அரசு மதிப்பளிப்பதில்லை எனலாம்.
இந்த நிலையில் இந்தியாவில் முஸ்லீம்கள் போன்று இன்னும் பல சமூகங்கள் கீழ்நிலையில் உள்ளபோது அனைத்து பதவிகளிலும் இருந்து வரும் உயர்ஜாதியினர்க்கு இட ஒதுக்கீட்டை தந்துள்ளது ஒன்றிய அரசு.மதவாத முதலாளித்துவ ஆட்சியை அமல்படுத்துவதே இவர்களின் நோக்கம் ஆகும். இந்திய நாட்டுமக்களை அரசிடம் கையேந்தும் பயனாளர்களாக பாஜக அரசு மாற்றி வருவகிறது ஒரு புறம்.
கர்நாடகவில் முஸ்லீம்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த பாஜக தலைமையிலான அரசு.கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸிடம் தோல்வியை தழுவியது.ஆனால் ஆட்சி என்பது நிரந்தரமானது அல்ல. பாஜக எங்கு ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லீம்களுக்கான இட ஓதிக்கீட்டை ரத்து செய்வதை அமல்படுத்தி வருகிறது என்பதை முஸ்லீம்கள் உணரவேண்டும்.கர்நாடக, கேரள, தெலுங்கான,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள முஸ்லீம்களை விட அரசியல் களத்தில் தமிழக முஸ்லீம்களின் பங்களிப்பை கடந்த காலங்களில் சிலர்களால் ஒதுக்கபட்டுவிட்டன.தற்போது முஸ்லீம்கள் பாஜகவிற்க்கு எதிரான நிலைபாடு எடுத்தாலும் அது திராவிட அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியாக மட்டுமே திசை திருப்ப பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கான அரசியலில் வளுவான ஆளுமையை இல்லாமல் போகிவிட்டது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பும்,காயிதமில்லத் அவர்கள் காலங்களில் முஸ்லீம்களுக்கு இருந்த செல்வாக்குகள் தற்போது அடியோடு சரிந்துள்ளன.முஸ்லீம்களின் இந்த போக்கு பாஜகவிற்க்கு ஆட்சியை பிடிக்க சாதகமான சூழ்நிலையை தான் எதிர்காலத்திலும் உருவாக்கிதரும்.
தமிழகத்தில் முஸ்லீம்கள் தங்களுக்கான கருத்து வேறுபாட்டின் காரணமாக முஸ்லீம்களின் வாக்கு வங்கிகள் பலனின்றி உள்ளதை உணர்ந்து முஸ்லிம்களின் நலன்கருதி பாஜக விற்கு எதிரான அரசியல் களத்துக்காக ஒன்றினைவதும் வரும் தேர்தலில் பணியாற்றுவதும் எதிர்கால முஸ்லீம் சமூகத்துக்கு காலத்தின் அவசியமாகும்.
இல்லையெனில் தமிழநாட்டில் உள்ள 3.5% முஸ்லீம்களுக்கான இட ஓதிக்கீட்டுக்கும் பாஜகவால் ஆபத்து விளைவிக்ககூடும்.