இன்றைய உலகில் எந்த பிரச்சினைகள் எங்கு நடைபெற்றாலும் அது தமக்கு பொருளாதாரத்தில் அல்லது பாதுகாப்பில் பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவற்றை கண்டுகொள்ளாமல் தனிமனிதனின் சுயநலன் போல் பல நாடுகளும் சுயநலமாக இருப்பது உண்டு.அதுபோல் அந்த நாடுகளை ஆட்சி செய்வதும் ஒரு மனிதன் தான்!.
இன்றைக்கு சில நாடுகள் பிற நாடுகளின் சண்டையின் மூலம் தமக்கு ஆயுத வியாபாரம் நடந்தால் போதும் என எண்ணுவதும் உண்டு.சில நாடுகள் சண்டைகளை சுய ஆதாயத்துக்கும் அவர்களின் வளங்களை பெற பயன்படுத்தி கொள்வதும் உண்டு.உக்ரைன் ரஷியா யுத்ததில் இந்தியா ரஷ்யாவிடம் குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களை பெற்று ஒரே விலையில் இன்றும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறதை பார்த்துவருகிறோம்.
ஆனால் இதற்க்கு முற்றிலும் மாற்றமாக கத்தார் அரசு செயல்பட்டுவருகிறது. உலகில் குறைந்த மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நாடு.மத்திய கிழக்கிலும் உலகெங்கிலும் அதன் செல்வாக்கை அதிகரித்து வருகின்றன.கடந்த சில வருடங்களில் தனது ராஜதந்திரத்தை மத்தியஸ்தில் பயன்படுத்தி உலகம் முழுவதும் பிரபலமாக்கியுள்ளது வளைகுடா நாடான கத்தார்.
இன்று ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுவதில் கத்தாருடன் போட்டியிடக் கூடிய எந்த நாடும் உலகில் இல்லை எனலாம்.அந்த அளவிற்க்கு சிறப்புடன் மனித பண்புக்குறிய உயரிய பணியாற்றுகிறது.
மத்தியஸ்தம் செய்வது ஒரு இஸ்லாமிய மனிதன் நற்பண்புகளில் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.ஐக்கிய நாட்டு சபைகள் கூட அதன் உறுப்பு நாடுகள் நடுநிலை தவறுவதால் இந்த அமைப்புகான நற்பெயர்கள் இன்று உலக அரங்கில் சரிந்துவருகின்றன.ஆனால் இன்று மத்தியஸ்தம் செய்வதில் கத்தார் கடந்த சில ஆண்டுகளின் ஒரு கைதேர்ந்த நாடாகவே உலகில் மாறியுள்ளது எனலாம்.
2020 ஆம் ஆண்டில் கத்தார் தலைநகர் தோஹாவில் கையெழுத்திடப்பட்ட அமெரிக்கா - தாலிபன் அமைதி ஒப்பந்தம் இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.2013 ஆம் ஆண்டு தனது நாட்டில் அரசியல் அலுவலகங்களைத் திறக்க தாலிபன்களுக்கு அனுமதி வழங்கி ஆதரவு அளித்தது கத்தார் அரசு.
அடுத்து கத்தாரின் முயற்சியின் பேரில் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே நடக்கும் போர்களுக்கு இடையில் நான்கு உக்ரைனிய குழந்தைகளை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ரஷ்யாவை ஒப்புக்கொள்ளசெய்தது.கத்தாரின் மத்தியஸ்த முயற்சிகள் இதுவரை பல தொடர்சியாக வெற்றிகளைக் கொடுத்துள்ளுன.
இந்த நிலையில் கடுமையான யுத்தகளமாகியுள்ள இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம். இந்தப் போரினால் எழுந்துள்ள மனிதாபிமான பிரச்னைகள் வரும் நாட்களில் கத்தார் அரசின் முயற்சியின் பின்பலமாக முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் நான்கு நாட்களில் காஸாவில் இருந்து 50 பணயக்கைதிகளை விடுவிக்கும் என்பதுடன் இஸ்ரேல் 150 பாலத்தீன கைதிகளை விடுவித்து வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய முத்தரப்பிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் கத்தார் பெரும் பங்கு வகித்துள்ளது.இந்த முயற்சிகளின் விளைவாக அக்டோபர் 20 அன்று இரண்டு அமெரிக்கப் பெண் பணயக்கைதிகள் ஹமாஸிடம் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
எந்தவொரு மத்தியஸ்தத்திற்கும் நடுநிலையாளர் நடுநிலையாகவும் இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருப்பது முக்கிய குறிப்பிடதக்க அவசியமாகும்.
கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்தி அனைவரின் கவனத்தை பெற்றதை அடுத்து. நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை அவற்றை மத்தியஸ்தம் செய்து சுமுக நிலையை எட்ட பாடுபடுவது வரவேற்க்கதக்கதும். இது அந்நாட்டுக்கு உலக அளவில் ஒரு நற்பெயரையும், நம்பகத்தன்மையையும் பெற்றுத்தந்துள்ளது வரலாற்று சிறப்பு குறியதாகும்.