Sunday 24 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

இந்திய மதச்சார்பின்மையின் மீது தாக்கப்பட்ட நாள் டிசம்பர் 6
நிருபர்: அத்திக்கடை நசூர்தீன் Dec 06 2023 செய்திகள்

இந்திய மதச்சார்பின்மையின் மீது தாக்கப்பட்ட நாள் டிசம்பர் 6

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இந்திய மதச்சார்பின்மையின் மீது கடப்பாரை கொண்டு தாக்கி இறங்கிய கொடூர நாள்.ஆனால் இன்று கோயில்களுக்கு,ரயில் நிலையம்,விமான நிலையத்துக்குப் பாதுகாப்பு எனப் பெருவாரியான ஊடக செய்தியில் அச்சப்படும் விதமாகக் கூறப்படுகிறது.

மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமா பாரதி உள்ளிட்டோர் நேரடியாகக் குற்றம் புரிந்தவர்கள்.ஆனால் ஒட்டுமொத்தமாக  இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதி தேவதையின் கண்களைக் கட்டியதின் விளைவு. உலகமே கண்டகாட்சியை CPI கண்களுக்குத் தெரியாமல் போனது. குற்றம் நிரூபிக்கவில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆனால் நீதி வழங்கவில்லை இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்திய ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் அன்று முதல் இன்று வரை சிறைக்குள் உள்ளது.

மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று ஒரு கட்டுக்கதையைக் கட்டிவிட்டனர். இதற்கான ஆதாரங்கள் எதையும் அவர்களால் இன்றுவரை நிரூபிக்கவில்லை.அயோத்தி இடம் தொடர்பான வழக்குகள் BJP ஆட்சியில் சட்டப்படி முடித்து வைக்காமல் தந்திரமாகக் கையாளப்பட்டது.சட்டம் அனைவருக்கும் சமம் என்பது வெறும் வெற்று வார்த்தைகள் தான்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பல கோடி செலவில் தற்போது ராமருக்கு கோவிலும் கட்ட பட்டுவிட்டது.

நான்கு மாநில தேர்தலில் ராமர் கோவிலுக்கு இலவச தரிசனத்தை அறிவித்து அப்பாவி கீழ்த்தட்டு இந்து மக்களிடம் வாக்கு வங்கிக்கு பாஜக இவற்றையும் பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளது.

இது ஒரு அரசியல் பாதையாகவும் மறுபுறம் சனாதன கொள்கையை விமர்சித்ததால் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக ஜாதிகளை உயர்த்தி பிடிப்பவர்களைக் கொண்டு சமூக வளைத்தளத்தில் கருத்துகளை பதிவிட்டு இதற்கு ஆதரவு கோருகிறார்கள்.

இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் மீண்டும் எழுந்துள்ளது.ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பை பாஜக நடத்தப்போவது இல்லை.அப்படி நடத்தினால் பார்ப்பன சமூகம் தனது சதவீதத்தைத் தாண்டி அதிகார மட்டத்தில் அனுபவித்து வருவதில் ஆபத்து வந்துவிடும்.

எனவே மோடி இப்போது புதிய ஜாதியை உருவாக்கியுள்ளார்.பெண்கள்,விவசாயிகள், இளைஞர்கள்,ஏழைகள் என இந்த நான்கு ஜாதிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் செல்பவர்கள் அமோக ஆதரவு உள்ளதாக வட மாநில தேர்தல் வெற்றி குறித்து புதிய விசயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இனி ஜாதி என்ற சொல்லை என்றும் பாஜக பசுமையாக பார்த்துகொள்ளும்.மதவாத அரசியல், ஜாதி என்கிற சனாதன அரசியல் என இரண்டை குதிரையை வைத்துத்தான் பாஜக இந்திய அரசியல்  வண்டியை இனியும் ஓட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நாடு முன்னேற்றத்துக்கு  இனி சமூக நீதி சக்திகள் ஒன்றுபடவேண்டும். இல்லையெனில் பாஜக அரசு இந்திய நாடு மதச்சார் பற்ற நாடாக தொடர்வது இனி சாத்தியக்கூறுகள் இல்லாமல் செய்துவிடுவார்கள்.

Related News