புதுடெல்லி டிசம்பர் 09
இந்தியா ஜனநாயகம் மக்கள் ஆட்சி பாதையிலிருந்து தற்போது விலகி ஒரு நபர்,ஒரு குழு,ஓர் அணி, என இவர்கள் விரும்பும் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் சென்று வருகிறது.இந்தியக் குடிமக்களால் நாடாளுமன்றத்துக்கும்,சட்டமன்றத்துக்கும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப் படுகிறார்கள்.
ஆனால் நாடாளுமன்ற நெறிமுறை குழு பரிந்துரையில் பெயரில் நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டில். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர். வினோத் குமாா் சோனகர் தலைமையிலான மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது.அந்த அறிக்கையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பரிந்துரைத்து மஹூவா மொய்த்ராவின் MP பதவியை பறிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த மஹுவா மொய்த்ரா எதிா்க்கட்சியினரை அடிபணியச் செய்ய நாடாளுன்றக் நெறிமுறைகள் குழுக்களை மத்திய அரசு ஒரு கருவியாகவும்,வாய்ப்பாகவும் பயன்படுத்தியுள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளாா்.இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடா்பானவை.இதற்கு பதில் அளிக்க தவறிய ஒன்றிய அரசு பதவி நீக்கமே ஒரே பதிலாக மோடி அரசு வெளியேற்றியுள்ளது.பதவி பறிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் எதையும் செய்யலாம் எனப் பாஜகவினா் நினைத்துக்கொண்டிருக்கின்றனா். ஆட்சியிலிருந்து இறங்கும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை அவா்கள் மனதில் கொள்ளவேண்டும். பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு மஹுவா மொய்த்ரா மீண்டும் திரும்புவாா்’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக அதானி குழுமம் குறித்த கேள்விகளுக்காகவே ராகுல் காந்தி அவர்களின் பதவியும் மற்றொரு காரணம் கூறி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.