Sunday 24 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் செயற்குழு கூட்டம்.
நிருபர்: அத்திக்கடை நசூர்தீன் Dec 13 2023 தமிழக செய்திகள்

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் செயற்குழு கூட்டம்.

திருவாரூர் டிசம்பர் 13

திருவாரூர் மாவட்டம் மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு கூட்டம்  கமலாலயம் வடகரை லெட்சுமி திருமண மண்டபத்தில் தலைவர் திரு A.R.லெட்சுமணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவாரூர் சரக மருந்துகள் ஆய்வாளர் திரு சுதர்சன் அவர்கள்  அனைத்து மருந்தகங்களில் CCTV கேமரா மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவிற்கிணங்க அமைப்பதின் அவசியம் குறித்தும். மயக்கம் மற்றும் போதை தரும் மருந்துகள் விற்பனையினை பாதுகாப்பாகக் கையாள்வது தொடர்பான  எச்சரிக்கை பணிகள் குறித்தும் உரையாற்றினார்கள்.

மேலும் மதுரையில் நடைபெற உள்ள மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதின் அவசியத்தினை திரு எஸ் ராமச்சந்திரன் மாவட்ட மருந்து வணிக சங்கம் செயலாளர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.இதில் திருவாரூர் தாலுகா நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இறுதியாகத் திரு நடராஜன் பொருளாளர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகைதந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.

Related News