போபால் டிசம்பர் 14
மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான் பதவிக்காலம் முடிந்து சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.
மத்தியப் பிரதேசத் தலைநகா் போபாலில் உள்ள லால் பரேடு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மாநிலத்தின் 19-ஆவது முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றாா். துணை முதல்வா்களாக ஜகதீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா ஆகியோா் பதவியேற்றன.
மூன்று முறை பாஜக எம்எல்ஏவான மோகன் யாதவ்.RSS அமைப்புக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
புதிய முதல்வராகப் பதவியேற்றிருக்கும் மோகன் யாதவ், திறந்தவெளியில் இறைச்சிக்கடைகளை நடத்துவதற்கும்,மசூதி வழிபாட்டுத் தலங்களில் விதிகளை மீறி வைக்கப்படும் ஒலிபெருக்கிகளுக்குத் தடை விதிக்கவும் உத்தரவிட்டு முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயங்கள் அளித்திருக்கும் உத்தரவுகளைப் பின்பற்றி, இவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக உருவாக்கிடவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளின் ஒலி அளவை கண்காணிக்கப் பறக்கும் படையை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கிகள் அனைத்து மதம் சார்ந்த வழிப்பாட்டு தளத்திலும் பயன்படுத்தபடுகிறது.மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலம் ஆகும்.இனி மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த முடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது.