Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  99 வது அமைப்பு தினம் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிருபர்: அத்திக்கடை நசூர்தீன் Dec 26 2023 செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99 வது அமைப்பு தினம் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரடாச்சேரி டிச26

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் 99வது அமைப்பு தினம் கொடியேற்றும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் தோழர் சி.சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது. வி.தொ.ச.மா.பொருளாளர் உ.பன்னீர்செல்வம்,ஒன்றிய துணை செயலாளர் என்.ஆறுமுகம், துரை.கதிர்வேல் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கட்சியின் செங்கொடியை ஏற்றிவைத்து மாவட்ட துணை செயலாளர் எஸ்.கேசவராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார். 

இதில் எம்.பக்கிரிசாமி, எம்.கவிதா, எஸ்.ஜி.மணியன், பி.கே.டி சந்திரன், வி.கௌரி.ப.கார்த்திகேயன்.  கே.ஜெயபால்,எஸ்.முரளி, எஸ்.சதாசிவம், ஏ.இருதயராஜ்,மற்றும் கிளைச் செயலாளர்கள்  கட்சி உறுப்பினர்கள் அனைவரும்  கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

வருகைதந்த அனைவருக்கும் கிளை செயலாளர் S.சின்னையன் அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டர்.

Related News