பொதக்குடி டிசம்பர் 26
தூத்துக்குடியில் பெய்த கனமழையில் பெரும் வெள்ளப் பாதிப்புகள் மிகுதியாக அந்தப் பகுதிகளில் ஏறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக பொதக்குடி கிளை சார்பாக நிவாரண அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை தமுமுக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் J.ஹாஜாகனி அவர்கள் மேற்பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை தூத்துக்குடிக்கு வழி அனுப்பிவைத்தார்.
பின்பு கூட்டணிக் கட்சியான திமுக கிளை அலுவலகத்துக்கு வருகை தந்த சென்னை மண்டல முன்னாள் நிர்வாகி இஸ்ரோ ராதாகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர் J.ஹாஜகனி ஆகியோர்களுக்கு பொதக்குடி திமுக கிளைச் செயலாளர் தமிழன் ஜெயிலா அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமுமுக மமக மாவட்ட தலைவர். M.முஜீபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் A.குத்புதீன், திமுக கிளை துணைச் செயலாளர் ஜெஹபர் சாதிக் (பூவப்பா),ஒன்றிய பிரதிநிதிகள் அல்ஹாஜ் M.அபூபக்கர், காதர் இப்ராஹீம், ஆய்குடி திமுக கிளைச் செயலாளர் முஹம்மது சலீம் மற்றும் ,தமுமுக மமக கிளை நிர்வாகிகள், திமுக கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.