பொதக்குடி டிசம்பர் 29
மழை வெள்ளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் சிறப்பு என்றும்.ஆனால் அரசுக்கு எதிராகக் குறைகூறும் பொறுப்பற்ற எதிர்க்கட்சிகள் என்று பொதக்குடி தமுமுக,மமக கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து திருவாரூர் மாவட்ட முன்னாள் தலைவர் A.M.தாஜூத்தீன் கூறியிருப்பதாவது.
மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பொழியும் பெரு மழையால் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும், அதனால் மக்கள் காப்பாற்றப்படுவதும், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு தேவையான உதவிகளை அரசு செய்து வருவதும் ஊடகங்களில் வழி உலகமே அறிந்த ஒன்று.
இதில் உலக நாடுகளிலேயே தன்னிறைவை அடைந்து விட்டோம், அபார பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டோம், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமுள்ள நாடு என்றெல்லாம் பெருமை பேசும் அமெரிக்காவில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழ்ந்த அமெரிக்க பகுதிகளில், வாரக் கணக்கில் நீர் வற்றாமலும், வடிகால்கள் இருந்தும் ஓட்டமில்லாமலும் சூழ்ந்திருந்த தருணம், நாட்டின் நிர்வாகம் என்ன செய்வதென்று விளங்காமல் நின்றிருந்த சமயம், பல கோணங்களில் ஆராய்வதும், பூமியில் துளையிட்டு (Drill) பூமிக்கடியில் வடியச் செய்திடலாம் எனும் கோணத்தில் அரசுக்கு, முதலில் தண்ணீரை வெளியேற்றி, அவரவர் இல்லங்களில் மக்களைக் குடியமர்த்த, அரசியல் செய்திடாத அமெரிக்க பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டுவெற்றிகண்டது.அதுசமயம்அமெரிக்க அரசு வெளிநாடுகளில் பொருளாதார உதவிகளையும் எதிர்பார்த்தது.
தமிழ்நாடு அரசு துரிதமாகச் செயல்பட்டு, சென்னை, மற்றும் தென்மாவட்டங்களின் பெரு வெள்ளங்களை, எதிர்க் கட்சிகளின் காழ்ப்புணர்ச்சி குறைகூறல்களை முறியடித்து தமுமுக, மமக போன்ற மனிதநேய அமைப்புகளின் தன்னலமற்ற சேவைகளின் துணை கொண்டு திறமையாக வெற்றி கண்டிருக்கிறது. மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அரசு நிர்வாகம்!இதற்காக வாழ்த்துக்களும்.அதே நேரம் பொறுப்பற்று குறை கூறும் எதிர்க்கட்சிகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.