அத்திக்கடை ஜனவரி 07
SDPI கட்சியின் சார்பில் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது.
இந்த மாநாடு இந்திய அரசியலிலும், தமிழ்நாட்டிலுள்ள அரசியலிலும் SDPI கட்சி தனக்கான வலிமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியச் சமூக ஜனநாயகக் கட்சி (Social Democratic Party of India) SDPI ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகச் செயல்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டிற்கு அத்திக்கடை இருந்து கிளைத் தலைவர் பால்ரார் ராஜா, செயலாளர் ஜியாவுதீன்.மற்றும் பாலாக்குடி கிளை துணைத் தலைவர் அசாருதீன் செயலாளர் அஸ்லம் அவர்கள் தலைமையில் SDPI கட்சியினர், திருவாரூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்து அதிகமானவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
அரசியல் பிரிவான SDPI கட்சி அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் தனது அரசியல் களத்தை வலிமைப்படுத்தியுள்ளது. மத்தியில் உள்ள ஒன்றிய பாஜக அரசு SDPI கட்சியின் வளர்ச்சியைப் பொருத்துக் கொள்ளமுடியாமல் PFI ஐந்து ஆண்டுகளுக்குத் தடை செய்ததாக அறிவித்தது.இருந்தும் அதன் அரசியல் பிரிவான SDPI கட்சியின் வளர்ச்சிக்கு இது உதவும் என அரசியல் விமர்ச்சகர்கள் கருக்கின்றனர்.