மதுரை ஜனவரி 07
SDPI கட்சியின் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரையில் நடைபெற்றது.
இதில் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் நாட்டில் மிகவும் மோசமான எமர்ஜென்சி காலக்கட்டத்தை இந்திய மக்கள் சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகிவிடும் என்றும். மேலும் பாஜகவைத் தோற்கடிப்பது என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட வேண்டிய இந்திய நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களின் முக்கிய கடமையாக உள்ளன.
பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் இதில் முக்கிய பங்கு கொள்ள வேண்டும் எனவும். தேர்தலில் மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் சூழ்ச்சிகள், சதித்திட்டங்கள் மூலம் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிடவிட வேண்டும் என்று மோடியும்,பாஜகவும் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இவற்றை முறியடிக்க 2024 இந்தியத் தேர்தல் ஆணையம் EVM வாக்கு எந்திரத்தைத் தடை செய்து மற்ற நாடுகளைப் போல வாக்குச்சீட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்தவேண்டும்.
தேர்தல் நேர்மையாக நடக்காத நாட்டில் மக்களாட்சி நடைபெறாது. கொள்ளையர்களின் ஆட்சிதான் நடைபெறும் என்று நந்தினி,நிரஞ்சனா இவ்வாறு அவர்கள் இதில் தெரிவித்துள்ளனர்.