மதுரை ஜனவரி 07
SDPI கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதில் SDPI கட்சி கொடியை மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஏற்றி மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்புரையும், மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபீத் அகமது தொடக்க உரையாற்றினார். அகில இந்திய தலைவர் பைஸி, பொதுச் செயலர்கள் அகமது நவவி, உமர் பாரூக், துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநிலச் செயலர்கள் ரத்தினம், நஜ்டா பேகம் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு நோக்கம் குறித்து விளக்கினார்.
இந்த மாநாட்டுத் திடலில் திறந்த வேனில் SDPI கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் அவர்கள் தொண்டர்களுக்கு மத்தியில் மாநாட்டுச் சிறப்பு அழைப்பாளரான அதிமுக பொதுச்செயலாளர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்து அழைத்து வந்தார்.
இது குறித்து மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியதாவது: ஆரவாரத்துடன் என்னை வரவேற்றனர். இதன் மூலம் அடுத்த தேர்தலில் வெற்றி இந்த கூட்டணிக்கு நிச்சயம் என்பது தெளிவாகிறது. முபாரக் இக்கட்சியைக் கண் இமை போன்று பாதுகாக்கிறார். SDPI நிர்வாகிகள் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்துவருகின்றனர். இங்கு அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையில் மதச்சார்பின்மையைக் காண முடிகிறது என்றும் இக்கூட்டம் தான் மதச்சார்பின்மை கூட்டம்.
நான் முதல்வர் ஆவேன் எனக் கனவில் கூட நினைக்கவில்லை. உயர் பதவிக்கு வந்ததைக் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.நான் உழைத்து வந்தேன்.தந்தை முதல்வராக இருந்ததால் நீங்கள் முதல்வராக வந்துள்ளீர்கள். இதைப்பற்றி உழைப்பவர்கள் கவலைப்படமாட்டார்கள். SDPI கட்சியினரும் அப்படிதான். வெல்லட்டும் மதச்சார்பின்மை என்ற தலைப்பு அருமை என்றும் இந்த மாநாட்டில் குடும்பம், குடும்பமாக இஸ்லாமியர்கள் வந்துள்ளீர்கள். அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள் கூறியதுடன். இவ்வாண்டு சிறப்பான ஆண்டாக அமையும். மதுரை மண் ராசியானது. இந்த மண்ணில் தான் SDPI மாநாடு நடத்துகிறது. இது வெற்றியாக உங்களுக்கு அமையும். அதிமுக மாநாடும் இங்கு தான் நடந்தது. அதிமுகவைப் பொறுத்துவரை சிறுபான்மையினரை அரண் போன்றுகாக்கும்.வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறிவுள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் திருப்திகரமான முறையில் வழங்கபடும்.அதிமுக கட்சி கூட்டணி கட்சியை வளர்க்கும்.திமுக கட்சி கூட்டணியை கட்சிகளை அழிக்ககூடியது. SDPI கட்சிக்கு அதிமுக அடித்தளத்தை ஏற்படுத்தும் என்பதாக இவ்வாறு மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டதிலிருந்தும் ஏராளமான முஸ்லீம்கள் மற்றும் பிற சமூக மக்களும் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் மாநிலச் செயலர் அபுபக்கர் சித்திக் மாநாட்டு நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கினார். மாநில அமைப்பு பொதுச் செயலர் நஸ்ருதீன் நன்றி கூறினார்.