அத்திக்கடை ஜனவரி 10
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாகத் தலா ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இவற்றை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் பொங்கல் தொகுப்பை வழங்கினார்.இதைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை நியாய விலைக்கடையில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு இன்று வழங்கப்பட்டது.