Sunday 24 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

EMI,ஆன்லைன் தனிநபர் கடன் குறைந்த ஆவணங்கள் போதும் வலை விரிக்கும் நிறுவனங்கள்!
அத்திக்கடை நசூர்தீன் DME., Jan 11 2024 தகவல்களம்

EMI,ஆன்லைன் தனிநபர் கடன் குறைந்த ஆவணங்கள் போதும் வலை விரிக்கும் நிறுவனங்கள்!

ஜனவரி 11

ஆதி மனிதனின் முதல் தேவை உணவாக இருந்து. இவை மாறி இன்று  மனிதனின் அன்றாடத் தேவைகள் உலகின் அனைத்துப் பொருட்களும் தன்னிடம் இருக்கவேண்டும் என்ற அசைகள் நிறைந்துவிட்டன. இதனால் பணத்தின் தேவைகளும் மனிதனுக்கு அதிகரித்துவிட்டது.

வரவுக்கு அதிகமான செலவினங்களைச் சமாளிக்கவும் தேவைகளைப் பூர்த்தி செய்ய அன்றைய காலங்களில் அடகுக்கடை அல்லது வங்கியில் தங்கம் அல்லது அடமானப் பொருட்களைக் கொடுத்து அதற்கான கடன் தொகையைப் பெற்றுவந்தனர்.

வட்டியையும் செலுத்தி பின்பு அசலையும் கொடுத்து தங்கள் உடமைகளை மீட்டு எடுக்கும் நிலை இருந்தது. கடனுக்காகச் சாமானிய மனிதனின் தன்மானம் இதுவரையும் பாதுகாப்பான முறையில் இருந்தது எனலாம். 

மனிதனுக்கு நவீனக் காலமான தற்போது தேவைகளும் வசதிகளைப் பெருக்கிக் கொள்ள விரும்ப வேண்டியதாகிவிட்டது. இவற்றைப் பயன்படுத்திக்கொண்ட உள்நாட்டு,பன்னாட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன்களை டூவீலரில் ஆரம்பித்து இன்று டூத்பேஸ்ட் வரை EMIயில் கொடுக்க தயாராகிவிட்டது.

டூத்பேஸ்ட் 50 ரூபாய்க்குக் கிடைத்தால் கூட ஐந்து மாதம் பிரித்து EMI யில் கட்டும் மனப்போக்கு சாமானிய மக்களிடத்தில் இன்று உருவாகிவிட்டது.

இதன் விளைவாக Top Finance Companies இந்தியாவில் வட்டியை மட்டுமே குறிக்கோளுடன் செயல்படுகிறது. இதன் மூலம் அனைத்து வர்த்தகப் பொருட்களையும் EMIயில் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

இப்போது பைனான்ஸ் நிறுவனங்கள் அடுத்து ஆன்லைன் மூலம் தனி நபர்களுக்கான கடன் வழங்கக் கூடிய வேலைகளை மின்னல் போன்று தொடங்கிவிட்டனர்.

தனியார் வங்கிகள் வழங்கிய கடனுக்கான வட்டி அல்லது அசல் தொகைகள் கட்ட தவறியவர்களிடம் வசூல் செய்ய அடி ஆட்களை வைத்து நேரடியாக மிரட்டி வசூல் செய்யப்படுகிறது இவற்றை அறிந்து வைத்துள்ளோம். ஆனால் இன்று ஆன்லைன் தனி நபர்கள் குறைந்த ஆவணங்கள் கொண்டு கடன்கள் கொடுக்கப்படுகிறது.

இவற்றை மக்கள் கடன் பெற இலகுவான வழி முறையாகக் கருதுகிறார்கள்.இதில் பணத்தைக் கடனாக பெற்றுத் திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலை ஒருவருக்கு ஏற்படுமானால் வாங்கிய நபர்களின் தனிப்பட்ட விசயங்களை ஆயுதங்களாக கையில் எடுத்துக்கொள்வார்கள் இந்த நிறுவனங்கள்.

இன்றைய கம்பியூட்ர் உலகில் கடன் வாங்கிய நபர்களின் மானத்தோடும், மரியாதையோடும் விளையாடும் போக்கு தற்போது உருவாகியுள்ளது. கடன் பெற்றவர்களை AI போன்ற தொழில் நுட்பத்தைக் கொண்டு ஆபாசமாக மார்பிங் செய்து பொது வெளியில் அல்லது உங்கள் நெருங்கியவர்கள் மத்தியில் அனுப்பிவைப்பதாகக் கூறி வட்டியையும், அசலை கேட்டு மிரட்டுவார்கள்.

இதனால் மன உளைச்சல்கள் ஏற்படுத்துவார்கள். கடன் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் விபரீதமான முடிவுகளையும் எடுக்கக்கூடும். இந்த நிலைகளில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். எனவே இப்படிப்பட்ட ஆன்லைன் தனி நபர் கடன் மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது காலத்தின் அவசியமாகும்.

பணத் தேவைகளைக் குறைத்து கடன் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி இல்லற வாழ்க்கையை இன்பமாக வளப்படுத்திடவோம்.