நிருபர்:அத்திக்கடை நசூர்தீன் DME.,
Jan 15 2024
தமிழக செய்திகள்
பொதக்குடி ஜனவரி 15
அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய்,பொங்கல் தொகுப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தமுமுக,மமக கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட முன்னால் தலைவர் A.M.தாஜூத்தீன் கூறியிருப்பதாவது
கல் தோன்றி, மண் தோன்றா மூத்த குடி தமிழ்க்குடி எனும் பெருமை மிக்க தமிழினத்தின் ஈகை குணத்தின் வெளிப்பாட்டின் பெருநாளான பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்களைத்
தமிழினத்தில் நானும் பிறந்திருக்கின்றேன் எனப் பெரும் மகிழ்ச்சி கொண்டவனாகத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ அவர்கள் ஆய்க்குடி ஊராட்சி, அகர பொதக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், (சேகரை) பொதக்குடி
அங்காடியிலும், சீனி வழங்கப்படும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 கூடிய பொங்கல் தொகுப்பு கொடுக்கபடவில்லை என்றும். ஆனால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலும், அறிக்கையும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனக்
கூறப்படுகிறது. இது சம்பந்தமாக
வட்டார உணவு வழங்கல் அலுவலரிடம் தொடர்பு கொண்டால், அதற்க்கான பொங்கல் தொகுப்பு தொகையுடன் கொடுக்கப்படவில்லை
என கூறியுள்ளார். எனவே பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.