திருவாரூர் பிப்ரவரி 07
வழிப்பாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக் வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருவாரூரில் மாவட்டத் தலைவர் பீர் முஹம்மது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநில பேச்சாளர் முகம்மது ஒலி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
கியான்வாபி பள்ளிவாசலின் கீழ்த்தளத்தில் பூஜை செய்து கொள்ள சங்க பரிவார சக்திகளுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கியுள்ள தீர்ப்பு இஸ்லாமியர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
ஏற்கனவே பாபர் மசூதியையும் இதே போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தித்தான் இஸ்லாமிய தரப்பிடமிருந்து பறித்தனர் அடுத்து காசி, மற்றும் மதுராவில் உள்ள பள்ளிவாசல்களைப் பறிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகவும் ,சட்டரீதியாகவும் சங்க பரிவார சக்திகள் முன்னெடுத்து வருகின்றனர்.
1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் பாதுகாப்புச்சட்டம் இந்திய நாடு சுதந்திரம் பெறும் போது எந்தெந்த வழிபாட்டுத்தலங்கள் எப்படி இருந்தனவோ அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளித்தது.ஆனால் அதற்கு மாற்றமான நடவடிக்கைகளில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது, ஜனநாயகமும், சட்ட நெறிமுறைகளும் குழி தோண்டிப்புதைக்கப்படும் இக்கால கட்டத்தில் ஜனநாயக ரீதியாக எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும் அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம் என்பதாக இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முகமது சலீம் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாசித் மாவட்ட துணைச் செயலாளர்கள் சர்க்கரை கனி அப்துல் மாலிக் ஜைனுல் தாரிக் ரிபாஸ் உள்ளிட்ட மாவட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என ஆயிரக்கணக்கானவர்கள் எழுச்சியோடு கலந்து கொண்டனர் இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் மாலிக் நன்றி தெரிவித்துகொண்டர்.