மார்ச் 03
கிராமங்கள்,நகரங்களில் முழுவதும் இன்று தெரு நாய்களினை எண்ணிக்கைகள் உயர்ந்து வருகிறது.நாடு முழுவதும் கோடிக்கணக்கான நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இவற்றை கட்டுப்படுத்துவதைவிட நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பு ஊசிகளைச் செலுத்துவதில் தான் அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன. இதற்காக பட்ஜெட்களில் மக்களின் வரிப் பணத்தை நிதியாகப் பெருமளவில் ஒதுக்கி அரசின் கடமையை முடித்துவிடுகிறது.
இரவு நேரங்களில் தெருக்களில், சாலைகளில் நடந்து செல்லக்கூடியவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்லபவர்கள் என நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதை விடக் கொடுமைகள் நாய்களின் பெருக்கத்தால் சிறுவர்கள் இன்று தெருக்களில் விளையாட முடியாத அவல நிலைகள்.
பள்ளிகளுக்குச் செல்லும் போதும், வீடுகளுக்குத் திரும்பும் போதும் சிறுபிள்ளைகளுக்கு நாய்களின் பெருக்கம் வீதிகளில் செல்வதற்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
பிற்பகல் நேரங்களில் கிராமங்களில் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளையும் தெரு நாய்கள் விட்டுவைப்பதில்லை. வளர்ப்பு ஆடுகளை தெரு நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கடித்து விடுகின்றன. இதனால் ஏராளமான வளர்ப்பு ஆடுகள் இறந்து விடுகின்றது.
பொதுமக்கள் நாய்களின் ஆபத்தை உணர்ந்தாலும். இவற்றை கட்டுப்படுத்தும் அரசு துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் விலை உயர்ந்த வாகனங்களிலும் செல்வதால் நாய்க்கடிக்கு ஆளாகுவதில்லை. இது குறித்து பெரியதாக அவர்கள் அக்கரை காட்டுவதும் இல்லை.
நாய் கடித்துவிட்டால் பாதிக்கப்பட்டவர் இவற்றிற்கான சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நாடுவதும். சிகிச்சைக்கு தேவையான நாட்களில் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வரவேண்டிய சூழ்நிலையை உருவாகிறது. அப்போது சாதாரணமான கூலி வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தங்களுடைய வருமானத்தை இழந்து விடுகிறன்றனர். நாய்க்கடி ஊசிக்கு நிதி ஒதுக்குவதைப் போன்று இந்தப் பாதிப்புக்கு உள்ளனவர்களுக்கு 5 லட்சம் இழப்பீடு தொகையை மத்திய,மாநில அரசுகள் வழங்கவேண்டும்.
தமிழ்நாடு அரசு சுகாதர துறைகள் மூலம் நாய்கள் பெருகுவதை கட்டுப்படுத்தி இதன் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும். பொது வெளியில் நாய்கள் சுற்றி திரியாமல் ஊராட்சி,நகராட்சி,மாநகர் போன்ற பகுதிகளில் நாய்களுக்கென தனியாக பாதுகாப்பு மைய்யம் ஏற்படுத்தி அரசே வளர்க்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.