சென்னை மார்ச் 05
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தமிழ்நாட்டுக்கு இந்த புதிய வருடத்தில் இரண்டு மாதங்களில் 4-வது முறையாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தாமரை’ மாநாடு நிகழ்சியில் பங்கேற்றார்.
தான் சென்னை வரும்போதல்லாம், தமிழக மக்களால் மகிழ்ச்சியை அடைகிறேன் என்று பெருமைபட்டுகொண்ட பிரதமர். தமிழர்களின் திறமை, இங்குள்ள வர்த்தகம், தமிழர்களின் பாரம்பரியத்தின் மையமாக சென்னை மாநகரம் திகழ்கிறது. எனக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது என்று பெருமிதம் அடைந்த மோடி.
ஆனால், சில ஆண்டுகளாக நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், சிலருக்கு வயிற்று வலியை ஏற்படுத்துகிறது.பாஜகவுக்கு தமிழ்நாட்டில் மக்களின் ஆதரவு தொடர்ந்து வலுவடைந்து வருவதுதான் இதற்கு காரணம். வளர்ந்த இந்தியாவுடன், வளர்ந்த தமிழகமும் வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
சென்னை போன்ற மாநகரங்கள் வளர்ச்சியடைய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. சென்னையில் பல ஆயிரம் கோடி மதிப்பில் நகர்ப்புற திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உட்பட தமிழநாட்டின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது.
ஆனால், மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு, சென்னைவாசிகளின் தேவைகளை, அவர்களது கனவுகளை கண்டுகொள்ளவே இல்லை. புயல் வந்தபோது, அவர்களுக்கு உதவிசெய்வதற்கு பதிலாக திமுக அரசு மக்களுக்கு துயரங்களையே அதிகமாக்கியது.
திமுகவினர் வெள்ள மேலாண்மைக்கு பதிலாக ஊடக மேலாண்மை செய்தனர். தமிழக மக்கள், தமிழகம் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை நலத்திட்டங்களுக்கான தொகையை மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் பயனாளிகளுக்கு அனுப்புகிறது. பல லட்சம் கோடி ரூபாய் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குக்கு சென்றுடைந்துள்ளது.
இந்த பணத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் திமுகவினருக்கு இருக்கும் சிக்கல். இந்த விஷயத்தில் மொத்த குடும்பமும் பயங்கர எரிச்சலில் இருக்கிறது. உங்கள் எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அளிக்கப்படும் பணத்தையாரும் பறிக்க மோடி ஒருபோதும் விடமாட்டார். நீங்கள் ஏற்கெனவே எடுத்த பணமும் திரும்ப வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும். இது மோடி அளிக்கும் உத்தரவாதம்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள், குடும்ப வளர்ச்சிக்கே முன்னுரிமை தருகின்றன. மோடி சொல்வது, தேசத்துக்கே முன்னுரிமை. இதனால்தான் இண்டியா கூட்டணிகட்சியினர் என்னை வசைபாடுகின்றனர். ஆதரவற்றவர்கள், ஏழைகள் எல்லோருக்கும் சொந்தமானவன் இந்த மோடி. இந்த பாரதமே என் குடும்பம். அதனால்தான் இன்று தேசம் முழுவதும், ‘‘நான் மோடியின் குடும்பத்தை சேர்ந்தவன்’’ என்று ஒரே குரலில் கூறுகிறது.
எனது உரையை முடிக்கும் முன்பாக, என் மனதை அரிக்கும் முக்கியமான கவலையை பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருவது என் மனதை வலிக்கச் செய்கிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது அபாயத்தின் அறிகுறி. நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால், தமிழக எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடி தரும் உத்தரவாதம்.
வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு உருவானால்தான், வளர்ச்சி அடைந்த பாரதம் வலுப்படும். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கியே தீருவோம் இவ்வாறு தாமரை மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.