Thursday 28 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

NEET நுழைவுத் தேர்வு..!இது எங்க ஏரியா...!உள்ள வராதே..!.
அத்திக்கடை நசூர்தீன் DME., Mar 08 2024 நாடும் நடப்பும்

NEET நுழைவுத் தேர்வு..!இது எங்க ஏரியா...!உள்ள வராதே..!.

மார்ச் 08/24

கல்வி,பணம்,பதவி,இவைகள் தான் இன்றை உலகின் உயர்ந்த வாழ்க்கையின் வசதிகளை தரும். இதை நோக்கியே இன்று அயராது  பாடுபடும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இன்றைய பெற்றோர்கள் தன்னுடைய கல்வி குறைவானதாகக் கருதிப் படும் சிரமத்தைத் தன்னை சார்ந்த பிள்ளைகள் அடையக்கூடாது எனக் கருதி உயர்கல்வியை வழங்க ஆசை படுவது நியாயமானதாகும்.

இதற்குக் கடிவாளம் அமைத்துள்ள மத்திய அரசு நுழைவுத் தேர்வு என்கின்ற தகுதித் தேர்வின் மூலமே மாணவர்களுக்கு உயர்கல்வி தற்போது இந்தியாவில் வழங்கப்படுகிறது.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான NEET தேர்வும்,IIT/NIT போன்ற மத்திய அரசின் நிதியுதவி பெறும், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதன்மைக் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான JEE எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வும்,CUET எனப்படும் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு உட்படப் பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்குப்  புதிய கல்வி முறையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதன் காரணமாக  படி,படியாக வகுப்பின் முன்னேற்றமான பள்ளிப் படிப்பின் மீதான முக்கியத்துவம் 10ம் வகுப்புக்கு மேல் +1,+2 வில் குறைந்து வருகிறது.

இந்தியாவில் முக்கிய பெரிய நகரங்களில் பத்தாம் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்களைத் தேர்வு செய்து,அவர்களின் பெற்றோரைப் பள்ளிகளின் நிர்வாகமே கலந்தாய்வு வழங்கி மாணவர்களை நேரடியாக நீட் போன்ற நுழைவு தேர்வு பயிற்சி மையங்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

இந்தப் பயிற்சி மையங்களிலேயே அவர்களுக்கு +1,+2  பாடத்திட்டம் தேவைக்காக கற்றுக் கொடுக்கப்படும் எனப் பள்ளிகள் நிர்வாகம்  எடுத்துக் கூறுவதோடு டெல்லி,மும்பை,போன்ற வட மாநில முக்கிய நகரங்களில் +1,+2 மாணவர்களின் பள்ளி வருகைப் பதிவேடுகள் பள்ளிக்கு அதிகப்பட்சம் வருகை இன்றி முறைகேடுகள் செய்யப்பட்டு நுழைவுத் தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். 

இதனால் நீட் தேர்வின் பயிற்சிக்கு ஏற்படக் கூடிய கல்விக்கான கால விரயம் தவிர்க்கப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இதற்குச் சம்மதிக்கின்றனர்.

இதன்மூலம் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் அதிகளவு கொள்ளை லாபம் ஈட்டுவதாக,கல்வி நிறுவனங்கள்,பயிற்சி நிறுவனங்கள்  நடத்தக்கூடியவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாக இன்று வளம் வருகிறார்கள் என்று கல்வியாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

கலை, அறிவியல் முதல் மருத்துவம், பொறியியல் என அனைத்து உயர் கல்விக்கும் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் போதும், பள்ளிக் கல்வியின் பாடத்தின் தேர்வின் மதிப்பெண்களுக்கு முக்கியதுமில்லை என்பதை இந்த நுழைவுத் தேர்வுகள் தற்போது சீர்குலைத்து வருகின்றன. 

கல்லூரிக்குச் செல்வதற்கான அடிப்படைத் தகுதிதான் +2 வகுப்பு என்ற மனநிலைக்குப் பெற்றோர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

மாணவர்கள் மத்தியில் இதே நிலை தொடரச்செய்கிறது எனக் கல்வி செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு இதுகுறித்து கூறுகையில், “இது திடீரென இந்த மாற்றம் ஏற்படவில்லை, நீட் அறிமுகமானதில் இருந்தே நடக்கிறது. நீட்டை மத்திய அரசு  அறிமுகப்படுத்தியதே இதன் நோக்கம் தான். 

பள்ளிப்படிப்பு மதிப்பெண்ணை வைத்து இனி உயர் கல்வியில் சேர முடியாது. நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் தகுதி எனச்  சொல்லிவிட்டார்கள். அப்படியிருக்க மக்கள் எதில் அதிகக் கவனத்தைச் செலுத்துவார்கள்?” எனக் கேட்கிறார்.

பள்ளிப் படிப்பில் பெயர் அளவில் இருக்கும் பட்சத்தில் இதனால் மாணவர்களின் கற்றல் செயல்பாடு பெருமளவு குறையும்.  

மனிதனின் தன்னம்பிக்கை, மனித உரிமைகள், பெண்ணுரிமை, சூழலியல் உரிமை, அரசமைப்புச் சட்டம் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை இந்த நுழைவுத் தேர்வு கலாச்சாரத்தில் மதிப்பிழக்கச் செய்யும்.

இவற்றையெல்லாம் முறியடிக்கப்படவேண்டும் என்பது கல்வியாளர்களின் ஆதங்கம் இருந்தாலும்.அரசியல் மற்றும் ஆட்சியில் உள்ளவர்களே இவற்றைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் இருக்கிறார்கள்.

இவர்கள் மாறும் வரை இதே நிலை தொடரும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் உயர்கல்வி குறித்த மனக்கவலையாகும்.

Related News