மார்ச் 11
இந்திய அரசியலமைப்பை மாற்றி அமைப்பது பாரதிய ஜனதாவின் நோக்கம் ரகசியமாக இருந்ததில்லை வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதா தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களிலிருந்து வெளிப்படுவது இந்தியா ஓர் இந்து நாடாக இருக்க வேண்டும் என்பது தான்.
பாரதிய ஜனதாவின் நோக்கம் இந்தியாவின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டப்படி இந்திய அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் அது நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், சிறுபான்மையினரின் உரிமைகள் என ஆகியவற்றுக்கு முடிவு கட்டிவிடும்.
இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னால் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.