டெல்லி ஏப்ரல் 02
நாட்டில் தற்போது EVM மெசின் மூலம் வாக்கு அளிக்கும் நடைமுறை உள்ளது.இவற்றின் நம்பிக்கை உறுதிப்படுத்த VVPAT என்ற மின்னணு சாதனமும் தேர்தலுக்கு இணைத்து உபயோகம் படுத்தப்படுகிறது.
இதில் நாம் அளிக்கும் வாக்கின் சின்னம் திரையில் தோன்றிய 7 நிமிடங்களுக்குப் பின்பு இதில் ஒப்புகைச் சீட்டாகப் காகித அச்சாக சின்னதுடன் பதிவாகும். ஆனால் இவற்றைத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையாக முழுமையாக எண்ணுவதில்லை.
இதனால் ஏராளமான முறைகேடுகள் தேர்தலில் நடைபெறுகிறது.இந்த நிலையில் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கூடுதல் அலுவலர்களை நியமித்து ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்குக் கூடுதலாக 6 மணி நேரம் மட்டுமே தேவைப்படும் என்றும். தற்போது VVPAT-ல் பதிவாகும் மொத்த ஒப்புகைச் சீட்டுகளில் தற்போது 5% மட்டுமே எண்ணப்பட்டு ஒப்பீடு செய்யப்படுகிறது.
விவிபேட் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும். ஏ.டி.ஆர். அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
இதனால் உச்சநீதிமன்ற தேர்தல் பத்திர உத்தரவை அடுத்து தேர்தல் ஆணையத்திற்க்கு உத்தரவு அளித்துள்ளது.இது பாஜகவுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.