Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

நாடாளுமன்ற தேர்தல்: அத்திக்கடையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Apr 19 2024 செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: அத்திக்கடையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

அத்திக்கடை ஏப்ரல் 19

18வது மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் 39  தொகுதிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நடைபெற்ற தேர்தலில் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை மற்றும் திருவிடைவாசல் ஊராட்சியில் காலை 7.00 மணி முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6.00 மணிக்கு முடிவடைந்தது.

இதில் அத்திக்கடை ஊராட்சியில் 3765 மொத்த வாக்காளர்களில் 1826 வாக்குகள் (48.5%) பதிவாகியுள்ளது.

திருவிடைவாசல் ஊராட்சியில் 2823 மொத்த வாக்காளர்களில் 1780 வாக்குகள் (63.05%) பதிவாகியுள்ளன. 

காலை 7.00 மணி முதல் தொடங்கிய வாக்குப் பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. மதியம் கடும் வெயில் தாக்கத்தின் காரணமாக  மந்தமான நிலையிலும்,மாலை சில வாக்காளர்களின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளுடன் பதிவாகி முடிவடைந்தன.

 மேலும் இந்தத் தேர்தலில் ஆண்கள்,பெண்கள் எனத் தங்கள் வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News