Thursday 28 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

10 வருட ஆட்சியில் சாதனையைச் சொல்ல ஒன்றுமில்லை ! மதச்சார்பற்ற தேசத்தில் தரந்தாழ்த்திய மோடியின் விசமப் பேச்சு !
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Apr 27 2024 நாடும் நடப்பும்

10 வருட ஆட்சியில் சாதனையைச் சொல்ல ஒன்றுமில்லை ! மதச்சார்பற்ற தேசத்தில் தரந்தாழ்த்திய மோடியின் விசமப் பேச்சு !

நியூடெல்லி ஏப்ரல் 26

நாடு விடுதலைக்குப்பின்பு மோடி போன்ற ஒரு பிரதமரைப் இந்தியா புதுமையாகச் சந்தித்துள்ளது. குஜராத்தில் முதல்வராக இருக்கும் போது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டிவிட்டு முஸ்லீம்களை இனப் படுகொலை செய்வதற்குக்  காரணமானவர் தான்  அன்றைய முதல்வர் மோடி. இதன் மூலம் அடுத்து இந்தியாவின் பிரதமர் பதவிக்கு வந்தவர்.

முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலையை நாட்டு மக்களுக்கு விசம் போல் ஏற்றும் கட்சி பாஜக அதன் தேர்தல் பிரச்சாரம் எந்த அளவிற்குத் தரம் தாழ்ந்துள்ளது என்பதைக் கடந்த ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார் மோடி. தன்னுடைய ஆட்சியில் செய்த எவ்விதச் சாதனைகளையும் சொல்ல முடியாமல் அதானி,அம்பானி என ஒரு சிலரை மட்டும் கோடீஸ்வரர்களாகக் கடந்த 10 வருடங்களில் தன்னுடைய ஆட்சிகளாங்களில்  உருவாக்கியுள்ளார். நாட்டின் மொத்த வளங்களும் வருமானங்களும் இவர்களின் கையில் தன்னுடைய பினாமியாக கொண்டு சேர்க்கபட்டுள்ளது.

இவற்றை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் நாட்டு மக்களுக்குத் தெரிவித்ததை அடுத்துப் பலிவாங்கப்பட்டதுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மோடியின் ஆட்சியில் பண மதிப்பிழப்பு,GST வரி, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்களுக்கு விற்பனை செய்வது போன்ற தவறான கொள்கையின் காரணமாகக் கோடான கோடி மக்களை வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் வாழும்  முஸ்லீம்களை அவமதிக்கும் வகையில் அதிகக் குழந்தைகளைப் பெறுபவர்கள்,ஊடுருவல்காரர்கள் எனத் தேவையற்ற வார்த்தைகளைக் கூறி வம்புக்கு இழுக்கும் வேலையை மோடி செய்துள்ளார்.

முஸ்லீம்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையான சமூகம். இந்த நாட்டின் வளங்களை அனுபவிக்கும் உரிமை படைத்தவர்கள் தான். இந்த நாட்டிற்காக எதையும் செய்யாத கைபார் கனவாய் வழியாக வந்த சிறு கூட்டம் தான் இன்று ஆட்சியில் அமர்ந்துகொண்டு முஸ்லீம்களை வஞ்சிக்கிறது.

இந்தியாவில் அரசியல் அதிகாரம் பெறத் தவறியவர்கள் மோடி போன்றவர்களால் எதிர்காலங்களில் இன்னும் கடுமையான பாதிப்புகளை  சந்திக்க நேரிடும் .

ஒரு பிரதமர் பதவியில் இருப்பவர் நாடாளுமன்றத்தில் தனது கடமைகளை ஆற்ற வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகள் வாதங்களை எதிர்கொண்டு அவற்றிற்குப் பொறுப்பான பதிலைக் கொடுக்க வேண்டும். தனது கட்சி என்னென்ன சாதனைகளைச் செய்து வருகிறது என்பதனை நாடாளுமன்றத்தின் மூலமாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இவற்றைச் செய்யாத மோடி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல், விதிமுறைப்படி பதில் அளிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகளின் வாதங்களுக்குப் பதில் அளிக்காமல் பதவிக் காலங்களிலிருந்துவிட்டு. காங்கிரஸ் கட்சிகளின் முன்னோடிகள் முதல் இன்றைய இளைய தலைவர்கள் வரை அனைவரையும் ஆதாரமற்ற,பொய்யான தரக்குறைவாக விமர்சித்தும் வருகிறார். பிரச்சார கூட்டத்திற்குப் பார்வையாளர்களாக பொது கூட்டத்திற்கு  வருகை தருபவர்களிடம் பதில் அளிப்பவரை ஒரு பிரதமர் என்று கூறுவது தவறாகும்.

மோடி பிரதமர் பதவியில் இருக்கிறார் அவ்வளவுதான்.பிரதமர்க்கான தகுதியுடையவர் அல்ல என்பது மோடியின் தேர்தல் பிரச்சாரம் அவரின் தோல்வி பயத்தை வெளிப்படுத்தி வருவது.

Related News