டெல்லி மே 13
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் மோடியின் தேர்தல் பிரச்சாரம் எப்போதும் கீழ்த் தரமான வகையில் இருப்பதுண்டு.காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும்,முஸ்லீம்களையும் கடுமையாக விமர்சிப்பதையே மோடி தேர்தல் பிரச்சாரமாகச் செய்து வருகிறார்.
ராகுல்காந்தியை பப்பு,இளவரசர்,எனவும் நாட்டின் வளங்களை அதிகம் பிள்ளை பெற்றவர்களுக்கும்,ஊடுறவுக்காரர்களுக்கு காங்கிரஸ் வழங்கப்போவதாகவும் கூறிய மோடி. அவுரங்கசீப்,நவாபுகள்,நிஜாம்களின் ஆட்சி குறித்துப் பேசுவதில்லை என ராகுல் குறித்து தெரிவித்தார்.
இராஜஸ்தான், உ.பி போன்ற மாநிலங்களில் தன்னுடைய ஆட்சியில் பத்து வருடகாலம் மக்களுக்கான சாதனைகள் இல்லை என்பதை உணர்ந்த மோடி. வடமாநில வாக்காளர்களைத் திசை திருப்பும் வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கெடுத்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக கட்சியின் விதிப்படி 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவி வகிக்க முடியாது என்பதால் விரைவில் 75 வயதை எட்டவிருக்கும் மோடி பிரதமர் ஆகமுடியாது எனவும். அமித்ஷாவை பிரதமராக்க மோடி வாக்கு சேகரித்து வருவதாகக் கூறினார்.
இந்த நிலையில் மோடி அரசின் எந்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கூறினாலும் வாய் திறக்காத பாஜக.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவின் கட்சியின் விதிப்படி மோடி பதவி வகிக்க முடியாது என்பது குறித்த தேர்தல் பிரச்சாரத்துக்கு, பாஜக மீண்டும் வெற்றிபெற்றால் மோடியே பிரதமராகத் தொடர்வார் என அமித்ஷா இவற்றை மறுத்து உடனடியாகப் பதில் அளித்துள்ளார்.டெல்லி முதல்வரின் இந்த பிரச்சாரம் இந்தியா கூட்டனிக்கு புத்துணர்வை தந்துள்ளது.