Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பொதக்குடியில் குறைந்த மின் அழுத்தம் சரி செய்திடவும் ,புதிய மின்மாற்றி வேண்டியும், கூத்தாநல்லூர் மின்வாரியத்தில் சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கத்தினர் கோரிக்கை.
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., May 25 2024 தகவல்களம்

பொதக்குடியில் குறைந்த மின் அழுத்தம் சரி செய்திடவும் ,புதிய மின்மாற்றி வேண்டியும், கூத்தாநல்லூர் மின்வாரியத்தில் சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கத்தினர் கோரிக்கை.

கூத்தாநல்லூர் மே 23

திருவாரூர் மாவட்டம் பொதக்குடி சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கம் சார்பில் கூத்தாநல்லூர் மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளர் (AE) அவர்களைச் சந்தித்தனர். பொதக்குடியில் நிலவிவரும் குறைந்த மின்அழுத்தம் (LOW VOLTAGE) இவற்றைச் சரிசெய்து தரவேண்டியும்.

B - பஜார் ஹாஜியார் தெரு வளைவு முதல் காதிரியா தெரு வரையும்,மேலத் தெரு ஆகிய பகுதிகளுக்குப் புதிய மின்மாற்றி (NEW TRANSFORMER) அமைத்துத் தரவேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளைக் கூடிய விரைவில் சரிசெய்து தருவதாக உறுதியளித்ததுடன்.மேலும் பொதுமக்களுக்கான குறைகளை மனு மூலம் அல்லது தொலைபேசி வழியாக தெரிவித்தால் உடனுக்குடன் அவற்றை சரி செய்து தருவதற்கு எந்த நேரமும் மின்வாரிய ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள் எனவும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கம் ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜி NM.நூர்கனி, AW.கஸ்ஸாலி,நாம் தமிழர் மாவட்டச் செயலாளர் KM.இக்பால்தீன், சுன்னத் வல்ஜமாஅத் செயலாளர் AM.தாஜுத்தீன், துணைத் தலைவர் S.S.முஹம்மது இஸ்மாயில், ஆகியோர் பங்கேற்றனர்.