கன்னியாகுமரி மே 29
கோடைக்காலச் சுற்றுலா,பள்ளிகள் விடுமுறைக் காலம் பொதுமக்களின் வருகையுடன் மிகவும் பரபரப்பாகக் காணப்படும் இடம் கன்னியாகுமரி கடற்கரை ஆகும்.
இங்கு பிரதமர் மோடியின் வருகையால், விவேகானந்தர் மண்டபத்துக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகைதந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார்,மாலை 5.30 மணி அளவில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்குத் தனிப் படகு மூலம் சென்று அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியானக் கூடத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார்.
நாளை மாலையிலிருந்து ஜூன் 1-ம் தேதி மாலை வரை விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தியானம் செய்கிறார். பிரதமரின் வருகையை அடுத்து கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.