ஜூன் 03 2024
மத்தியில் பத்தாண்டுக் காலம் மோடியின் பாஜக ஆட்சி நடைபெற்று நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துள்ளது. இதன் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க் கிழமை வெளியாக உள்ளன.
கடந்த மோடியின் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட இன்னல்கள் ஏராளமானது. இதில் குறிப்பாக முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமை திருத்தச்சட்டம்,
தெலுங்கானா போன்ற மாநிலத்தில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்கிற பகிரங்கப் பிரச்சாரம் என முஸ்லிம்களை அச்சுறுத்தும் வேலையைத்தான் மோடி ஆட்சியில் செய்துவந்துள்ளார்கள்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஏற்பட்ட பொதுவான பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, GST வரி, பணமதிப்பிழப்பு,கொரான கால நடவடிக்கைகள், தேர்தல் பத்திர விவகாரம்,விவசாயிகள் பிரச்சினைகள் என இவை ஒரு புறம் நிகழ்ந்தவை.
இந்தத் தேர்தலில் பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க எதிர்க் கட்சியான காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் மூலம் இந்தியா கூட்டணி எனத் தேர்தல் கூட்டணி அமைத்தாலும் அது வலிமையானதாக ஒன்று சேர்க்கப்படவில்லை என்பதே எதார்த்தமானது.
மத்தியில் தேர்தல் கூட்டணி, மாநிலத்தில் இல்லை என்ற முறையில் கேரளா,மேற்குவங்கம், பஞ்சாப்,ஒரிசா போன்ற மாநிலங்களில் பாஜகவை இந்தியா கூட்டணி எதிர் கொண்டுள்ளது. பாஜகவிற்குச் சாதகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இங்கு உயர்த்தித் தரும் சாத்திய கூறுகள் உள்ளன.
ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளர் மட்டுமே பாஜக கட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.மற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகள் பெயரளவிலான முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பு தந்துள்ளன.
தற்போது ஆட்சி மன்றத்தில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது. எதிர்காலங்களில் முஸ்லீம்கள் உறுப்பினர்கள் இல்லாத நிலைகள் கூட வரக்கூடியதாகும்.
தமிழகத்தில் கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக் கட்சியின் ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே இடம் தந்த நிலையில் திமுக கட்சி கூட முஸ்லிம் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இவைதான் இந்தியாவின் எதிர்கால முஸ்லீம்களின் அரசியல் பங்களிப்பு இல்லாத நிலையாகும். வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டும். முஸ்லீம்கள் கல்வி கற்றாலும் இன்னும் உரிய அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதில்லை.
ஆட்சி அதிகாரம் இல்லையெனில் முஸ்லீம்கள் கல்வியில்,வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாமல் இன்னும் பின் தங்கிய சமூகமாக இந்தியாவில் இனியும் மாறக்கூடும்.
இந்தியாவைப் பெருத்தவரை ஆட்சி அதிகாரம் பெறவில்லையெனில் உனக்கான உரிமைகளைப் பெறமுடியாது என்பதை முஸ்லிம்கள் தான் உணரவேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எதுவாகினாலும்.
தனக்கு வேண்டிய உரிமைகளைப் பெற நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் உன் உரிமைக் குரல் ஒலிக்கவேண்டி மாற வேண்டியது இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தான் ஆட்சி மாற்றம் அல்ல!