முத்துப்பேட்டை ஜூன் 07
இந்திய தேசிய ஒற்றுமைப் வலியிறுத்தி முத்துப்பேட்டையை சேர்ந்த 22 வயதான முகம்மது முஜ்ஜமில் முத்துப்பேட்டையில் பயணத்தை வியாழன் கிழமை தொடங்கினார். சென்னை, ஹைதராபாத், ஆக்ரா, தில்லி, சிம்லா, மணாலி வழியாக சுமாா் 4 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இந்திய எல்லையான லடாக், இதை தொடர்ந்து ஜம்மு- காஷ்மீா் வரை செல்ல இருப்பதாகவும்.
செல்லும் இடங்களில் இந்தியாவின் ஒற்றுமை குறித்து பிரசாரம் செய்ய இருப்பதாகவும். சுமாா் 45 தினங்கள் இந்த பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தாா்.
இருசக்கர வாகன பயண தொடக்க நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநில பொதுக் குழு உறுப்பினா் மெட்ரோ மாலிக், இளைஞா் காங்கிரஸ் மாநிலச் செயலாளா் ஜெகபா் பாட்சா, வட்டார தலைவா் வடுகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜாம்பவானோடை தா்கா தலைமை அறங்காவலா் எஸ்.எஸ். பாக்கா்அலி சாகிப், பயணத்தை தொடங்கி வைத்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் செல்லத்துரை, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் சையத் முபாரக், , காங்கிரஸ் ஹரிஜன பிரிவு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் உப்பூா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.