2024 ஜூன் 12
முஸ்லீம் சமூகத்திலிருந்து ஒருவரை கூட அமைச்சராக்குவது என்பது பாஜகவுக்கு மிகவும் கடினமானது ஆகும்.
முஸ்லீம்கள் குறித்து எந்த அளவுக்கு தேர்தல் பரப்புரையில் அவதூறுகளை மோடி பேசினார் என்பதை நாடு நன்கறிந்த நிலையில்.
இந்த முறை தேர்தலில் மொத்தம் 24 முஸ்லிம்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வாகினர். எனினும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிலும் முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லை. என்றாலும் பாஜகவின் முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் கூட இந்த முறை அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.
இந்திய முஸ்லிம்களை வெறும் வாக்காளர்களாக வைத்திருக்கும் வேலையை பாஜக அரசு தற்போது செய்து வருகிறது.
பாபர் மசூதி இடிப்புக்குப் பின்பு இந்திய அரசியலில் முஸ்லிம்கள் பங்கை வாக்கு வங்கிக்காக மட்டும் பயன்படுத்தி சட்டமன்ற,நாடாளுமன்ற பிரதிநிதிதுவத்தை மற்ற அரசியல் கட்சிகளும் வெகுவாகக் குறைந்து வருவதும்,முஸ்லிம்கள் தனித் தனி குழுக்களின் அமைப்புகளாகவும், தனித்துப் போட்டியிட முடியாத கட்சிகளாகவும் இருப்பதே முஸ்லிம்களின் இந்த நிலைக்கு காரணமாகும்.மேலும் தொகுதி சீரமைப்பிற்கு பின் முஸ்லீம் வாக்குகள் பொரும்பான்மை இல்லாதவாறு பிரிக்கபட்டுள்ளன.
மோடி புதிய அமைச்சரவையில் பிற மத சிறுபான்மையினர்களுக்கு வாய்ப்பளித்த போதிலும் முஸ்லிம் சமூகத்தினருக்குப் பிரதிநிதித்துவம் இல்லை.
பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நேற்று முன்தினம் பதவியேற்றார்.
இவரது அமைச்சரவையில் உள்ள 71 உறுப்பினர்களில் 5 பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் சீக்கியர்கள், இருவர் பவுத்தர்கள், ஒருவர் கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.