Sunday 24 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

இந்தியாவில் தொடரும் ஹிஜாப் சர்ச்சை, நீதி கிடைக்கும் எனப் போன இடமும் கை விரித்தது !!
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Jun 27 2024 செய்திகள்

இந்தியாவில் தொடரும் ஹிஜாப் சர்ச்சை, நீதி கிடைக்கும் எனப் போன இடமும் கை விரித்தது !!

மும்பை ஜூன் 26 

மும்பையில், செம்பூர் டிராம்பே கல்விச் சங்கத்தின், N.G.ஆச்சார்யா மற்றும் T.K.மராத்தே கல்லுாரி இயங்கி வருகிறது.

ஹிஜாப், புர்கா, தொப்பி உள்ளிட்டவற்றை மாணவர்கள் அணியக் கூடாது என்றும், ஆடைக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டது.

இவற்றை எதிர்த்து அந்த கல்லுாரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒன்பது மாணவிகள், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.நேற்று இந்த மனு, விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், கல்லுாரி நிர்வாகத்தின் உத்தரவு, மாணவியரின் மதத்தை கடைப்பிடிப்பதற்கான அடிப்படை உரிமைகள் எனவும்,கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவு தனியுரிமைக்கு எதிரானது. ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாத ஆடையின் அங்கம். கல்லுாரி நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

கல்லுாரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹிஜாப், புர்கா போன்றவற்றை தடை செய்வதற்கான முடிவு என்பது ஆடைக் குறியீட்டிற்கான ஒரு கல்லூரியில் ஒழுங்கு நடவடிக்கை யாகும். இது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது அல்ல. அனைத்து மதம் மற்றும் ஜாதியைச் சேர்ந்த மாணவர் களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு உள்ளது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு, கல்லுாரி நிர்வாகம் எடுத்த முடிவில் தலையிட முடியாது என மும்பை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்தது.

Related News