புதுடெல்லி ஜூலை 05
மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல் போக்கு காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலை சற்றும் கண்டுகொள்ளாத, பிரதமர் மோடி இதுவரையும் அங்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார் இவற்றைக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரும் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்பு உள்ளது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் கூறுகையில், பிரதமர் மோடிக்குப் பல முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. ககன்யான் விண்வெளித் திட்டத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்தில் அவர் இணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
நாட்டின் பிரதமரை நம்பிக்கையுடன் விண்வெளிக்கு அனுப்பும் திறன் என்பது, நாம் அனைவரும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்குக் கிடைக்கும் என்றார்.
இது குறித்த செய்தியை டேக் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளிக்குச் செல்வதற்கு முன், மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.