மன்னார்குடி ஜூலை 11
திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்கம் சிறப்பு கூட்டம் மன்னார்குடி சிட்டி மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் A.R லெட்சுமணன் அவர்கள் தலைமையிலும், செயலாளர் S.ராமச்சந்திரன்,பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு கூட்டத்திற்க்கு வருகை தந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் அவர்கள் மருந்து வணிகர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து,அவற்றை நிறைவேற்றிதர அனைத்து முயற்சிகளும் செய்து தருவதாக உறுதியளித்தார்.
மேலும் தஞ்சாவூர் மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் S.S முகமது கமால் அவர்களும், மன்னார்குடி சரக ஆய்வாளராக பணியாற்றி,தஞ்சாவூர் சரக ஆய்வாளராக பொறுப்பேற்க்கும் P.ராஜதுரை அவர்கள் மற்றும் மருந்து வணிகர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியாக மன்னார்குடி தாலுக்கா மருந்து வணிகர்கள் சங்க தலைவர் PL.பழனியப்பன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொண்டார்.