சென்னை ஜூலை 20
மாணவர்கள்,பெற்றோரகள்,ஆசிரியர்கள்,விருந்தினர்கள் எனப் பட்டமளிப்புவிழா கல்லூரி வளாகத்திற்குள் நடத்து முடித்துவிடும் நிகழ்ச்சியாகும்.இது என்றும் பேசும்பொருளாக மாறியதில்லை.ஆனால் நேற்று சென்னை IIT யில் பட்டமளிப்பு விழாவில் தன்ஞ்செய் பாலகிருஷ்ணன் ஆற்றிய உரை உலகெங்கும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
அறிவியவிலை மனிதகுலம் அழிவுக்கு பயன்படுத்தும் பெரும் நிறுவனங்களுக்கு தமது வேதனையை கணத்தகுரலில் பதிவு செய்துயிருப்பது பாராட்டைபெற்றுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்.கல்வி கற்பது என்பதே பிழைப்பதற்காகத்தான் என்ற மனநிலை கடந்த 30 ஆண்டுகளில் வேரூன்றி வளர்ந்து வரும் நிலையில், இது போன்ற மாணவர்கள் நம்பிக்கை தரும் நட்சத்திரங்களாக மிளிர்கிறார்கள்.
பெற்றோர், பேராசிரியர்கள், சக நண்பர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அவரது உரையின் தொடக்கமும், அவரது உடல் மொழியும் ஆரம்ப நிலையிலேயே உற்சாகமாக இருந்தது.எதைப் பேசப்போகிறார்? என்று யாருக்கும் தெரியவில்லை! அவர் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளை பற்றியோ; தனது எதிர்கால கனவுகளை பற்றியோ, எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி பற்றியோ பேசியிருந்தால் அது அந்த அரங்கத்தின் கைத்தட்டல்களோடு முடிந்து போயிருக்கும்.
அவரது நண்பர்களும், உறவினர்களும் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடியிருப்பார்கள். அவர் மரணத்தின் மேகக் கூட்டங்களுக்கு கீழ் வாழ்க்கையை நடத்தும் மக்களை பற்றி பேசியது தான் குளிரூட்டப்பட்ட அந்த அரங்கில் அனலை மூட்டியது!
கடந்த 9 மாதங்களாக பலஸ்தீனில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாத போர் குறித்து அவர் கவலையுடன் பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை!
பலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை என்றும், பலஸ்தீனர்களை கொல்ல அறிவியல் தொழில்நுட்பத்தை பெரும் நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு அளிப்பதையும் அவர் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார். பேரழிவுக்கு துணை போகும் வகையில் அறிவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என்ற மனநிலையை வெளிப்படுத்தியவர், பெரும் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் நாம் இது போன்று வர்க்கம் -இனம்- பாலினம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம்? என கேள்வி எழுப்பி அரங்கத்தின் சிந்தனைப் போக்கை திசை மாற்றியிருக்கிறார். இன்று மதியம் முதல் நாடெங்கிலும் Viral ஆன அவரது உரை, மாலையில் எல்லைகளை கடந்து உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
எங்கோ, யாருக்கோ நிகழும் அநீதி என பாராமல் மானுடத்தின் அமைதியை நேசித்து, தன் கன்னி உரையின் மூலம் காயப்படும் மக்களின் மீது மருந்துகளை தூவியுள்ளார். இது போன்ற ஒரு உரை மாணவர் மன்றங்களிலோ, கருத்தரங்குகளிலோ பேசப்பட்டிருந்தால் அது அரசியல் என முடக்கப்பட்டிருக்கும்.
மேட்டுக்குடியினர் குவிந்திருந்த அரங்கில் பேசப்பட்டதும், பேசியவரின் பின்னணியும்தான் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.பணம் குவிப்பு, சொத்து சேர்ப்பு, குடும்ப நலன், சுகபோக வாழ்க்கை என சுருங்கி வரும் சமூகவியலில் அவரது உரை; இடியும், மின்னலுமாய் தாக்கியிருக்கிறது.
'பிராய்லர் கோழிகள்' போல வளர்க்கப்படும் தலைமுறைகளால் ஆரோக்கியமான சமூக மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை.
கல்வியுடன், சமூகத்தைப் பற்றியும் கவலைப்படும் வகையில் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும் ! வார்த்தெடுக்கப்பட வேண்டும்! தொலைந்து போய்க் கொண்டிருக்கும் மனித நேயத்தை தனஞ்செய் பாலகிருஷ்ணா போன்றவர்கள் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும்!
தனஞ்செய் பாலகிருஷ்ணா சுதந்திர சிந்தனைகளுடன் முழங்கியிருக்கிறார் என்றும் வாழ்த்துக்கூறியுள்ளார்.
மேலும் கற்றக் கல்வி மூலம் வளர்த்துக் கொண்ட திறனை, ஆக்கப்பூர்வமான வழியிலேயே பயன்படுத்த வேண்டும், அதனை அழிவுக்கு பயன்படுத்தப்படக் கூடாது.உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலையும், இஸ்ரேல் மற்றும் வல்லரசு நாடுகளின் பேரழிவு ஆயுதங்களின் சோதனைக் களமாக உள்ள பாலஸ்தீன் காஸாவுக்கான மாணவர் பாலகிருஷ்ணனின் இந்த ஆதரவுக்குரல் வரவேற்கத்தக்கது.
மாணவர் தனஞ்ஜெய் பாலகிருஷ்ணனுக்கு அவர்களின் விசாலமான பார்வை பாராட்டுக்குரியது எனப் SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.