அத்திக்கடை ஜூலை 26
திருவாரூர் மாவட்டம்,அத்திக்கடை SKSF தெரு சாலை தைக்கால் தெரு, சுக்காங்கேனி ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய வழிதடத்தில் உள்ளது.
சில ஆண்டுகாலமாக மோசமான நிலையை அடைந்து வரும் இந்த மண் சாலை லாரி,டிராக்டர்,கார், வேன்,ஆட்டோ,பள்ளி வாகனங்கள்,மோட்டார் சைக்கிள்கள் என இந்த சாலையில் தான் சென்று வருகின்றன.
மழை காலங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்று பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்படுவதுடன், வாகனங்கள் செல்ல முடியாமல் வழுக்கி விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர்.
எனவே சம்பத்தபட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக சேதமடைந்த SKSF தெரு மண் சாலையை தார் சாலையாக சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.