Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அத்திக்கடை ஜைனப்பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் 4ஆம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி.
முகம்மது நசூர்தீன் DME., Aug 04 2024 ஆன்மீகம்

அத்திக்கடை ஜைனப்பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் 4ஆம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி.

அத்திக்கடை ஆகஸ்ட் 04

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை தாருல் அர்கம் அறக்கட்டளை நடத்தும் ஜைனப்பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா,மற்றும் நான்காம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி அல் அரஃபா மஹாலில்   நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜைனப் பெண்கள் கல்லூரி பொருப்பாளர் A.அசாருதீன் அவர்கள் தலைமையிலும், அத்திக்கடை நிர்வாகிகள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். 

ஜைனப் மக்தப் மதரஸா மாணவி S.ஆசியா அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.

நிகழ்ச்சி தொகுப்பு மெளலவி J.நியாஸ் ஃபிர்தவ்ஸி ஆசிரியர் அவர்களும்,ஜைனப் கல்லூரி நிர்வாகி  ஃபைசல் ரஹ்மான் ஆண்டறிக்கை வாசித்தார்.

JAQH மாநில முன்னாள் தலைவர் ஷைக் S.கமாலுத்தீன் மதனி அவர்கள்,

ஷைக் M.L.அப்துல் மஜீத் மஹ்ளரி,

உஸ்தாத் M.பஷீர் ஃபிர்தவ்ஸி ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள்.

முபல்லிகா பட்டம் பெற்ற 39 மாணவிகளுக்கு அடியக்கமங்கலம் ஆசியா வ மர்யம் மத்ரஸா நிறுவனர் ஹபீப் நாஜிரா பர்வீன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.

மேலும் வகுப்பிற்குத் தினமும் வருகை தந்த மாணவிகளுக்குப் ஊக்கப் பரிசளிப்பு வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சியில் மாணவிகளின் பெற்றோர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

இறுதியாக ஜைனப் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி நிர்வாகி K.A.ரிஸ்வான் கான் அவர்கள் நிகழ்ச்சி வருகைதந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Related News