Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

கல்வி நிறுவனங்களுக்குப் பாடம் நடத்திய நீதிபதிகள் ! உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதில் தருமா ஒன்றிய மோடி அரசு ?
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Aug 10 2024 நாடும் நடப்பும்

கல்வி நிறுவனங்களுக்குப் பாடம் நடத்திய நீதிபதிகள் ! உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதில் தருமா ஒன்றிய மோடி அரசு ?

புதுடெல்லி ஆக 09

உலகில் ஒவ்வொரு மதமும் அவைகளுக்கான கடமைகளின் நெறிமுறைகளை வகுத்துத் தந்துள்ளன. இவற்றை அந்த மதங்களை வாழ்க்கை நெறிகளாக ஏற்றுக்கொண்டவர்கள் பின்பற்றிவறுகிறார்கள். இதுவே எதார்த்தமானது.

அனைத்து மதத்தினர்களும் வாழும் இந்திய போன்ற நாடுகளில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வருகின்றன.

கடந்த பத்தாண்டுக் காலங்களாக மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு  மதவாத அரசியல்வாதிகளின்  உள்ளடி வேலைகளின் பின்னணியில் கர்நாடக, மஹாராஷ்டிரா போன்ற  மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதைத் தடைசெய்ய முயற்சிசெய்து வருகிறது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்றைக்கு ஹிஜாப் விவகாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை இடைக்கலமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்த விசாரணையின் போது இஸ்லாமியப் பெண்கள் என்ன உடை அணிந்து வரவேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அந்தச் சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்கவேண்டும்.

இஸ்லாமியப் பெண்களை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனச் சொல்வதுபோல் மற்ற பெண்களைப் பொட்டு வைக்கக் கூடாது,

திலகம் வைக்கக் கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா?, அவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா?

பெயரிலேயே மதத்தைக் கண்டுபிடித்துவிடலாமே? அப்படியானால், அதற்கு மாற்றாக எண்களை வைத்து அழைப்பீர்களா?.

என்று கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் மத பேதமின்றி அனைத்து மாணவர்களும் இணைந்து பயில வழிவகை செய்ய வேண்டும்” என்று கல்வி நிறுவனங்களுக்கு வலியுறுத்தினர்.

முன்னதாக மும்பையில் உள்ள கல்லூரியில் மாணவ, மாணவிகள் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிவதற்குக் கடந்த மே மாதம் தடை விதித்தது. இது தங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக உள்ளது என்றும்,கல்லூரியின் நடவடிக்கையை எதிர்த்து 9 முஸ்லிம் மாணவிகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மாணவ - மாணவிகள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மத ஆடைகளுக்கு கல்லூரி தடை விதித்துள்ளது. மாணவிகளின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக இதைக் கருத முடியாது என்று கல்லூரிக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. 

மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அம்மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

அதேநேரம், உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான பர்தா போன்ற ஆடைகளை மாணவிகள் அணிந்துவர விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மீண்டும் வழக்கின் விசாரணை நவம்பர் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

Related News