அத்திக்கடை ஆக 15
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அத்திக்கடை ஊராட்சியில் 78 வது இந்தியச் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டம் அல் அரஃபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி.சாருஸ்ரீ இ.ஆ.ப அவர்கள்,கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள்,மன்னார்குடி வருவாய் கோட்டச்சியர் கீர்த்தனா மணி அவர்கள்,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு பூண்டி கே.கலைவாணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் குளம்,வாய்க்கால் தூர்வார ஏற்றதுபோல் ஒவ்வொரு 100 மீட்டர் தொலைவுகளையும் ஆக்கிரமிப்புகளை தாங்களே பேசி சரிசெய்து கொண்டு தெரிவித்தால், அரசு அதிகாரிகள் மூலம் அவற்றைத் தூர்வாரி தருவதாகவும்,தூர்வாரும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரசு தயக்கம் காட்டவில்லை எனவும் சுமுக நிலைக்கு அனைவருக்கும் இவை உதவும் என்றும்.
குப்பைகள் சேர்வது வெளியிலிருந்து வரக் கூடிய பிரச்சனைகள் இன்றி நமக்கு நாமே ஏற்படுத்தக்கூடியதாகவும்,
இவற்றை மக்கும் குப்பை,மக்காத குப்பை எனப் பொதுமக்கள் தருவதும்.மறு சுழற்சியில் பயன்படுத்தக்கூடியதையும்,
அழிக்கக் கூடியதைத் தரம் பிரித்துக் கையாள்வதும் இதற்கான தீர்வை ஊராட்சி மன்றத்தின் மூலம் சரிசெய்துகொள்ளமுடியும் என்பதாகவும்,
மேலும் குறைந்த வயதில் பெண்களின் திருமணம் நடத்துவதை தவிற்காவும் கேட்டுக்கொண்டார்.பட்டா தேவையுடையவர்களுக்கு அனைவருக்கும் தன் பதிவிகாலத்திலேயே விரைவில் பட்டா அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்து வழங்கப்படும் என்பதாகவும் தெரிவித்தார்.
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் பட்டா தொடர்பாகக் கூறுகையில் இதுவரையும் 60 நபர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் 120 நபர்களுக்கு மேல் பட்டா தயார் நிலையில் இருப்பதாகவும் கூடிய விரைவில் தேவையுடைய அனைவருக்குமே பட்டா வழங்கிட நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
முன்னதாக வரவு, செலவினங்கள் குடிநீர் வழங்குதல்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதிகளுக்கான மேல் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி மன்றம் சார்பாகத் தகவல் அளிக்கப்பட்டது.
மேலும் ஊரில் ஆரம்பச் சுகாதார மருத்துவமனைகளின் குறைபாடுகள், நாய்களின் பெருக்கம் அதிகமாகவும் இதனால் வரக்கூடிய ஆபத்துகள். இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித்திரிவது மற்றும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றவும்,குப்பைக் கிடங்கு ஏற்படுத்திடவும்,வாய்க்கால்,குளம் ஆக்கிரமிப்பு மற்றும் தூர்வார்வது குறித்த பிரச்சனைகளைக் கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் குறைகளை தெரிவித்துக்கொண்டனர்.
கிராம சபைக் கூட்டத்தில் ஒன்றிய தலைவர் R.பாலச்சந்தர்,கலியபெருமாள்,கலை வேந்தன், கிராம அலுவலர் ராஜசேகர்
ஊராட்சி மன்றத் தலைவர் பாத்திமா பாவா பகுருதீன்,துணைத்தலைவர் ஜெஹபர்சாதிக்,ஜமாத் தலைவர் அப்துல் முகமது,ஹலிகுல்ஜமான்,சுல்தான் ஆரிப்,ஜெஹபர்தீன், பொருளாளர் ஜெஹபர்தீன்
வார்டு உறுப்பினர்கள் ஜென்னத்துல் ராபியா,சலீம்,சிராஜ்நிஷா,ஜாஹீர் உசேன்,ஹலில்,ஜவஹர்நிஷா,கலை ராஜா,மதி,இதயதுல்லாஹ்,மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.