குவைத்தில் இன்று 6 பேர் தூக்கிலிடப்பட்டார்கள்
குவைத்தில் கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேருக்கு இன்று வியாழக்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது..
இன்று அவர்கள் குவைத் மத்திய சிறையில் உள்ள தூக்கு மேடையில் அரசு வழக்கறிஞர் மேற்பார்வையில் தூக்கிலிடப்பட்டனர். தனது நண்பரைக் கொன்ற குற்றத்திற்காக இன்று தூக்கிலிடப்படவிருந்த குவைத் பெண், பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் இரத்தப்பணத்தை செலுத்த ஒப்புக்கொண்டதையடுத்து கடைசி நிமிடத்தில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
ஒரு குவைத் பெண் உட்பட 3 குவைத் நாட்டவர்கள், 2 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் உட்பட 6 பேருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது..
கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி நாட்டில் 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குவைத்தில் கொலை, போதைப்பொருள் கடத்தல், தேசத்துரோகம் போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..