தரவுகள் என்பது எல்லாத் துறைகளிலும் மிக முக்கியமானவை. குறிப்பாக நம் கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களை,
கோப்புகளை (files), புகைப்படங்களை, மற்றும் ஆவணங்களைத் தற்செயலாக இழந்துவிட்டால், அல்லது அழிந்து விட்டால் பெரும்
மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அழிந்த தரவுகளை
மீட்பது கடினமான செயலாகத் தோன்றினாலும், பல வழிமுறைகள் மூலம்
அதனை மீட்கலாம். எப்படி என்று பார்ப்போம்.
உயிர்ப்புடன் உள்ள கம்ப்யூட்டரில் அழிந்து போன தரவுகளை மீட்கும் வழிகள்.
அதிக அளவில் நாம் அழித்த கோப்புகள் Recycle
Bin அல்லது Trash -இல் இருக்கும். இங்கு
இருக்கும் கோப்புகளை மீண்டும் சரிசெய்யலாம்.
Recycle Bin-ஐத் திறந்து, மீட்க விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
அங்கு Restore என்பதைக் கிளிக் செய்தால்
கோப்புகள் மீண்டும் மூல இடத்திற்குத் திரும்பும்.
Backup இருந்து அதன் மூலம் மீட்பது
நீங்கள் ஏற்கெனவே Backup (தரவுகளைப் பாதுகாப்பாக எடுப்பது) செய்து வைத்திருந்தால், உங்களுக்கு கம்ப்யூட்டர் தரவுகளை இலகுவாகவே மீட்கலாம். சில முக்கியமான Backup முறைகள்:
Windows Backup: Windows-இல் உள்ள Backup வசதியைப் பயன்படுத்தித் தரவுகளை மீட்டெடுக்கலாம்.
Time Machine : Time Machine வழியாகத் தரவுகளை மீட்கலாம்.
System Restore அல்லது Previous Versions செயல்முறை மீட்டெடுப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
Windows-இல் உங்கள் கணினியில் System
Restore அல்லது Previous Versions வசதிகள்
ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டிருந்தால், அதனைப்
பயன்படுத்தி அழிந்த கோப்புகளை மீட்கலாம். System Restore மூலம்
கோப்புகள் மற்றும் அமைப்புகளை முந்தைய நிலைக்கு மாற்ற முடியும்.
Previous Versions என்பதன் மூலம் கோப்புகளின் பழைய பதிப்புகளையும் மீட்டெடுக்க முடியும்.
உங்களின் முக்கியமான கோப்புகளை Backup எடுத்து
வைத்துக்கொள்ளுங்கள் அல்லது Cloud storage (Google
Drive, OneDrive, Dropbox போன்றவை) பயன்படுத்துவது மிகச் சிறந்தது.
அழிந்து விட்ட தரவுகளை மீட்க முடியுமா? என்றால் முடியும். இந்த வழிமுறை கம்யூட்டருக்கு மட்டுமல்ல மொபைலுக்கும் பொருந்தும்.
மால்வேர் அல்லது வைரஸ் போன்ற தாக்குதலுக்கு உள்ளானாலும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்களின் தரவுகளை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.
வளத்துடன் வாழ்க
மு. உசைன் கனி